Latest Updates
-
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்.. -
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
குழந்தை பெற்றுக்கொள்ள இலட்சக்கணக்கில் மானியம் கொடுக்கும் நாடுகள் - டிக்கெட்டை உடனே போடுங்க
ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்தியாவில் குழந்தையை வளர்ப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக இருக்கும் அதேநேரத்தில் உலகில் சில நாடுகள் குடிமக்களின் இந்த கடமையில் பங்கேற்றுக் கொள்கிறது. பிறப்பு விகிதங்கள் குறைந்து, மக்கள் தொகை முதுமையடைவதால், குடிமக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் முயற்சியில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பணப் பரிமாற்றங்கள், வரிச் சலுகைகள், வீட்டு மானியங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆதரவை அதிகளவில் வழங்கி வருகின்றன.

குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் மக்கள் முதுமையடையும் போது அவர்களை ஆதரிக்கப் போதுமான மக்கள் பிறப்பதில்லை. குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் ஒரு உலகளாவிய பிரச்சனையாகும். இந்த பிரச்சினையை சமாளிக்க, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நேரடிப் பணம் வழங்குவது முதல் பல ஆண்டுகளுக்கான குழந்தை பராமரிப்பு உதவி வரை, பெருகிவரும் பல நாடுகள் குடும்ப நலனுக்கான தாராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. அவை என்னென்ன நாடுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூர்
உலகின் மிகவும் குறைந்த பிறப்பு விகிதங்களில் ஒன்றை எதிர்கொண்டுள்ள சிங்கப்பூர், குடும்பங்களுக்கான நிதி உதவியை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தையின் பிறப்புக்குப் பிறகும், குழந்தைகளை வளர்க்கும் ஆரம்பக்கட்ட ஆண்டுகள் வரையிலும் உதவிகளை வழங்க அரசு விரும்புவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் சமீபத்தில் அறிவித்தார். ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயதை அடையும்போது, ஏறக்குறைய 70,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் 52 லட்சம்) வரையிலான நேரடி நிதி உதவியை வழங்குகிறது. இத்திட்டம், 'பேபி போனஸ்' திட்டத்தை உள்ளடக்கிய தற்போதைய திட்டத்திற்கு மாற்றாக அமையும்.
சீனா
சீனா கடந்த காலத்தில் பிறப்புகளைக் கட்டுப்படுத்துவதிலிருந்து, தற்போது அவற்றைச் தீவிரமாக ஊக்குவிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. பல தசாப்தங்களாக அமலில் இருந்த 'ஒரு குழந்தை' கொள்கைக்குப் பிறகு, பிறப்பு விகிதம் குறைந்து மக்கள் தொகை குறையத் தொடங்கியதால், சீன அதிகாரிகள் இப்போது கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க முயற்சித்து வருகின்றனர். 2025-ஆம் ஆண்டில், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் 48,000) வழங்கும் வகையிலான நாடு தழுவிய குழந்தை பராமரிப்பு மானியத் திட்டத்தை பெய்ஜிங் அறிமுகப்படுத்தியது. குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்கும், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த மானியம் வழங்கப்படுகிறது.
ஜப்பான்
மக்கள் தொகை சரிவை தொடர்ந்து எதிர்கொள்ளும் நாடுகளுக்குள், ஜப்பான் உலகின் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஜப்பானின் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொடர்ந்து நீடிக்கும் குறைந்த பிறப்பு விகிதம் ஆகியவை, குடும்பங்களுக்கான நிதி உதவியை விரிவுபடுத்தும் திட்டத்தை உருவாக்கியது. மாதந்தோறும் வழங்கப்படும் குழந்தைகளுக்கான உதவித்தொகை, 5,00,000 யென் (இந்திய மதிப்பில் 3 லட்சம்) வரை உயர்த்தப்பட்டுள்ள குழந்தை பிறப்புக்கான ஒருமுறை நிதியுதவி மற்றும் விரிவுபடுத்தப்பட்ட குழந்தை பராமரிப்பு சேவைகள் ஆகியவை அரசின் நடவடிக்கைகளில் அடங்கும்.
தென் கொரியா
உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும். எனவே அதை உயர்த்துவதற்காகத் தென் கொரியா பல பில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருகிறது. பெற்றோருக்கான மாதாந்திர மானியங்கள், குழந்தை பிறப்பின்போது வழங்கப்படும் நேரடி நிதியுதவி, குழந்தைப் பராமரிப்புக்கான ஆதரவு, நீட்டிக்கப்பட்ட பெற்றோர் விடுப்பு மற்றும் வீட்டுவசதி உதவி உள்ளிட்ட விரிவான சலுகைத் திட்டங்களை அந்நாட்டு அரசு வழங்குகிறது. 2022-ஆம் ஆண்டில் தென் கொரியா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி, பெண்களுக்குக் குழந்தை பிறக்கும்போது 2 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் 1.5 லட்சம்) வழங்கப்படுகிறது. அத்துடன், அக்குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 700,000 வோன் (இந்திய மதிப்பில் 48,000) வழங்கப்படுகிறது. பின்னர், குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை பெற்றோருக்கு மாதம் 350,000 வோன் (இந்திய மதிப்பில் 25,000) வழங்கப்படுகிறது.
ஸ்வீடன்
குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஸ்வீடன் நாடு ஊக்கத்தொகையை வழங்குவதில்லை. மாறாக, பெற்றோர்களுக்கு அவர்கள் கொண்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாதாந்திர மானியம் ஒன்றை வழங்குகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் 1,250 SEK (இந்திய மதிப்பில் 13,000) வழங்கப்படுகிறது. மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் 'பெரிய குடும்பங்களுக்கான கூடுதல் உதவித்தொகை'யைப் பெறத் தகுதி பெறுகின்றன. இரண்டு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு மாதம் கூடுதலாக 150 SEK (இந்திய மதிப்பில் 1500) வழங்கப்படுகிறது; மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு 730 SEK (இந்திய மதிப்பில் 7,500) கிடைக்கிறது. நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு மாதம் 1,740 SEK (இந்திய மதிப்பில் 17,500) வழங்கப்படுகிறது.
பின்லாந்து
குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்க, பின்லாந்து பணப் பலன்கள் மற்றும் குடும்ப ஆதரவு சேவைகள் ஆகிய இரண்டையும் இணைத்து வழங்குகிறது. அந்நாட்டின் மிகவும் பிரபலமான குடும்பத் திட்டங்களில் ஒன்றான 'பேபி பாக்ஸ்', புதிய பெற்றோருக்குப் பச்சிளம் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குகிறது. மேலும் குடும்பங்கள் நிதி உதவி மற்றும் மாதாந்திரப் பலன்களையும் பெறலாம். தகுதியுள்ள குழந்தைகளின் பெற்றோர், அக்குழந்தைக்கு 17 வயது பூர்த்தியாகும் வரை மாதாந்திரத் தொகையைப் பெறுகிறார்கள். ஒரு குழந்தையைக் கொண்ட குடும்பங்கள் 94.88 யூரோக்களையும் (இந்திய மதிப்பில் 10,500), இரண்டாவது குழந்தைக்கு 104.84 யூரோக்களையும், மூன்றாவது குழந்தைக்கு 133.79 யூரோக்களையும், நான்காவது குழந்தைக்கு 173.24 யூரோக்களையும், ஐந்தாவது குழந்தைக்கு 192.69 யூரோக்களையும் பெறுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம்(UAE)
ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களுக்குக் குழந்தை பிறப்பு தொடர்பான மிகச் சிறந்த நிதி உதவித் திட்டங்களில் சிலவற்றை வழங்குகிறது. குழந்தை பிறப்புடன் தொடர்புடைய கணிசமான நிதி உதவியைப் பெற எமிராட்டி குடும்பங்கள் தகுதிபெறலாம். அதேவேளையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மாதாந்திரக் குழந்தைகள் மானியத்தையும் பெறக்கூடும். பெரிய குடும்பங்களுக்கு வீட்டுவசதி மற்றும் கடன் நிவாரணம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. வசிக்கும் இடத்தைப் பொறுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன் தனது குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு 2,20,000 திர்ஹம்(இந்திய மதிப்பில் 58 லட்சம்) வரை வழங்கப்படுகிறது. மேலும் நாட்டின் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றான 'நாஃபிஸ்' குழந்தைப்படித் திட்டம், தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாதாந்திரத் தொகையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் படி தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 163 அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் 15,500) வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications

