Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த கணவர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் சில ஏற்ற இரக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் பர்பெக்ட்டான மனிதர் என்று யாருமே இல்லை. ஒரு உறவு நீண்ட காலம் நிலைத்திருக்க காதல், அர்ப்பணிப்பு, புரிதல் மற்றும் மன்னிக்கும் குணம் என பல பண்புகள் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறையும் போது அது அந்த உறவில் விரிசலை ஏற்படுத்தும். இருப்பினும், சிலர் பர்பெக்ட்டானவர்களாக இல்லாவிட்டாலும் இந்த குணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிறந்த வாழ்க்கைத்துணையாக மாறுகிறார்கள்.

ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்த ஆண்களிடம் இந்த குணங்கள் நிறைவாக இருக்கும். அவர்கள் சிறந்த காதலராக, கணவராக இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. யார் வேண்டுமென்றாலும் சிறந்த கணவராக இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் இந்த மாதங்களில் பிறந்தவர்களிடம் அதற்கான பண்புகள் அதிகமுள்ளது. இந்த பதிவில் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் மென்மையான இதயமும், தீவிர காதல் உணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வும், உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எளிதில் காதலில் விழக்கூடியவர்கள் மற்றும் இயல்பிலேயே வசீகரமானவர்கள். ஒருமுறை அவர்கள் உறவில் உறுதியாக நுழைந்துவிட்டால், அவர்கள் அதில் ஆழமாக இறங்கி விடுவார்கள்.
அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு தங்கள் நேரத்தையும் பாசத்தையும் மட்டுமல்லாமல், முழுமையான ஆதரவையும் வழங்குவார்கள். இது அவர்களை ஒரு அர்ப்பணிப்புள்ள மற்றும் அக்கறையுள்ள வாழ்க்கைத்துணையாக மாற்றுகிறது. அவர்கள் சிற்றின்பத்தை அதிகம் விரும்புபவராக இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்களின் ஏதிர்காலத்தை ஒருவருடன் மட்டுமே திட்டமிட்டு அதை செயல்படுத்துவார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்த ஆண்கள் அவர்களின் இரக்க குணத்திற்கும், அரவணைக்கும் இயல்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் சில காலம் பழகியவர்களாக இருந்தாலும் சரி, நீண்ட காலம் பழகியவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்காக அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ, இயல்பாகவே அனைவரின் மீதும் அரவணைப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்களின் அன்பும், எண்ணங்களும் எப்போதும் தூய்மையானதாக இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படும் இவர்கள் நிலையான உறவை விரும்புகிறார்கள், அவர்கள் எப்போதும் பொழுதுபோக்குக்காக காதலிக்க மாட்டார்கள், இது அவர்கள் தங்கள் மனைவியை அணுகும் விதத்தில் பிரதிபலிக்கும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், அவர்களிடமிருந்து உண்மையான அன்பையும், விசுவாசத்தையும் எதிர்பார்க்கலாம்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களாக அறியப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை எப்போதும் நேர்மறையாக அணுகுகிறார்கள், மற்றவர்களிடம் உள்ள நல்லதையே பார்ப்பார்கள். அவர்களின் இயல்பான வசீகரமும், நிலையாக இருக்கும் உற்சாகமும் அவர்களை இயல்பிலேயே அனைவரையும் ஈர்ப்பவர்களாக மாற்றுகிறது.
உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள், பகிர்ந்துகொள்வதே வாழ்க்கையின் சிறந்த பகுதி என்று நம்புகிறார்கள். ஒரு உறவில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையை ஒன்றிணைத்து, தங்களுடையது தங்கள் துணைக்கும் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்துவார்கள். இன்பமோ, துன்பமோ அதை தங்களின் துணையுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

