அழகான பெண்கள் அதிகமுள்ள டாப் 10 நாடுகள் - எந்த நாடு முதலிடத்தில் இருக்கு தெரியுமா?

உலகில் எந்த நாடு பெண்கள் மிகவும் அழகானவர்களாக இருப்பார்கள் என்பதை என்பது பெரும்பாலான ஆண்கள் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு விஷயமாகும். அழகு என்பது பார்ப்பவரின் கண்களில்தான் உள்ளது. இருப்பினும், முக அமைப்பு மற்றும் உடலமைப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் உலகின் அழகான பெண்கள் உள்ள நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நபருக்கு நபர் மாறுபடலாம், ஏனெனில் பெண்கள் என்றாலே அழகானவர்கள் என்று அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். இந்த பதிவில் உலகில் அழகான பெண்கள் உள்ள டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Countries With Most beautiful Women In The World

வெனிசுலா

உலக வரலாற்றில் அதிகமான 'மிஸ் யுனிவர்ஸ்' மற்றும் 'மிஸ் வேர்ல்ட்' வெற்றியாளர்களைக் கொண்டுள்ள நாடு வெனிசுலாதான். இந்த நாடு அழகான முகங்களைக் கொண்ட பெண்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நீண்ட, ஒல்லியான உடல்வாகு மற்றும் வசீகரமான முகங்களைக் கொண்டிருப்பதால், இந்த நாட்டு பெண்கள் மிகவும் அழகானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் திகழ்கின்றனர். வெனிசுலா உலகின் மிக அழகான பெண்களைக் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. இது வெறும் அவர்களின் உடல் அழகிற்காக மட்டுமல்லாமல், அவர்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரமாகும்.

இந்தியா

நம் இந்தியா பன்முக அழகு நிறைந்த ஒரு நாடாகும். இங்குள்ள பெண்கள் பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் இனங்களின் கலவையைப் பிரதிபலிக்கின்றனர். இந்தியப் பெண்கள் தங்கள் பிரமிக்க வைக்கும் தோற்றத்திற்காக மட்டுமல்லாமல், தங்கள் திறமைகள், அறிவுக்கூர்மை மற்றும் வசீகரமான ஆளுமைக்காகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். பல்வேறு இனங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட நம் நாடு, உலகின் மிக அழகான பெண் முகங்கள் பலவற்றை உலகிற்கு அளித்துள்ளது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா நாட்டு பெண்கள் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்த நாட்டின் பெண்கள் தங்கள் அழகின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் தனி கவனம் செலுத்துவதுடன், எப்போதும் கவர்ச்சியாகவும், தைரியமாகவும் தோற்றமளிக்க முயல்கின்றனர். தங்கள் பளபளப்பான சருமத்துடன், இந்த நாட்டு பெண்கள் எப்போதும் நவீன ட்ரெண்ட்களை பின்பற்றுகின்றனர். பன்முக கலாச்சாரம், பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் நிறைந்த நகரங்களுக்குப் பெயர் பெற்ற அர்ஜென்டினா, உலகின் மிக அழகான பெண்களில் சிலருக்கு தாயகமாகத் திகழ்கிறது.

செர்பியா

செர்பியா நாட்டின் பெண்கள் உயரமாகவும், கச்சிதமான உடல்வாகுடனும், வசீகரிக்கும் கண்களுடனும் இருக்கிறார்கள். அவர்கள் பிரமிக்க வைக்கும் வளைவான உடலமைப்பைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களில் 99% பெண்களின் உடலமைப்பு திரைப்பட கதாநாயகிகளை போல இருக்கும் என்று கூறப்படுகிறது. செர்பிய அழகிகள், நேர்த்தி, வசீகரம் மற்றும் நளினம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக இருக்கிறார்கள்.

தென் கொரியா

தென் கொரிய பெண்களின் அழகு உலகப்புகழ் பெற்றது. பெரும்பாலான நாடுகளின் பெண்கள் கொரிய பெண்கள் போல காட்சியளிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இந்த அழகிய பெண்கள், களங்கமற்ற மற்றும் கவரும் முகத்தோற்றத்தையும், ஈர்க்கக்கூடிய ஆளுமைப் பண்புகளையும் கொண்டுள்ளனர். அவர்களின் ஒளிரும் சருமம், பளபளப்பான கருங்கூந்தல் மற்றும் கச்சிதமான உயரத்துடன் கூடிய மென்மையான உடல்வாகு இவர்களை மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக மாற்றுகின்றன.

பிரான்ஸ்

பிரெஞ்சுப் பெண்கள் தங்கள் வெளிப்படையான மனப்பான்மை, துடிப்பான ஆற்றல் மற்றும் தனித்துவமான ஆடை அலங்கார பாணிகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்கள். பொன்னிறக் கூந்தல் கொண்ட இந்த நாட்டின் பெண்கள், மிகுந்த நேர்த்தியும், காதல் உணர்வு மிக்க ஆளுமையும் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். நேர்த்தி மற்றும் வசீகரம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகத் திகழும் பிரெஞ்சு பெண்களின் அழகு, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இத்தாலி

ஆலிவ் நிறம் சருமத்தையும் பழுப்பு நிறக் கூந்தலையும் கொண்ட இத்தாலியப் பெண்கள், உலகின் அழகிய தோற்றம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். செழுமையான வரலாறு, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் வியக்கத்தக்க கலாச்சாரம் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற நாடான இத்தாலி, உலகின் மிகச் சிறந்த அழகுடைய பெண்களில் சிலருக்கும் தாயகமாகத் திகழ்கிறது. இணையற்ற அழகு, வசீகரம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றைக் கொண்டுள்ள இத்தாலியப் பெண்கள், தங்கள் நேர்த்தியாலும் கவர்ச்சியாலும் உலகத்தையே அலங்கரித்து வருகின்றனர்.

உக்ரைன்

ரஷ்யாவுடனான போரால் பிரபலமான உக்ரைன் அதன் அழகான பெண்களுக்கும் புகழ்பெற்றது. உக்ரைனில் உலகின் மிகவும் துணிச்சலான மற்றும் அழகான பெண்கள் உள்ளனர். அவர்கள் உலகின் கவர்ச்சியான மற்றும் வசீகரமான பெண்களில் ஒருவராக திகழ்கின்றனர். தோற்றத்திலும், ஆளும்மையிலும், அவர்கள் ரஷ்யப் பெண்களை ஒத்திருக்கிறார்கள்.

பிரேசில்

பிரேசில் பெண்கள், பொன்னிற மற்றும் கருநிற முடி கொண்டவர்கள், அவர்கள் கம்பீரமான ஆளுமைக்கும் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்திற்கும் வசீகரமான முகங்களுக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த அழகிய பெண்களில் பெரும்பாலானோர் பளபளப்பான சருமத்துடன் மிதமான நிறத்தைக் கொண்டுள்ளனர். உலகின் பல புகழ்பெற்ற அழகிய விளையாட்டு வீராங்கனைகள் பிரேசிலைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா

ரஷ்யப் பெண்கள் தங்களின் அழகான ஒளிரும் வெண்மையான சருமம், நீல நிற கண்கள், வசீகரமான உடலமைப்பு மற்றும் நல்ல உயரத்திற்காக உலகப்புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த வசீகரமான பெண்களில் பெரும்பாலானோர் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சீரான உடலமைப்பைக் கொண்டுள்ளனர்.

Story first published: Thursday, May 14, 2026, 16:33 [IST]
Desktop Bottom Promotion