Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம்
நம் பூமியில் பல்வேறு கலச்சாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர். உலகம் தொழில்நுட்பத்திலும், நாகரிகத்திலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும் பல பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கலாச்சாரத்தை இன்னும் உறுதியாக பின்பற்றி வருகின்றனர்.

உலகின் தொலைதூரத்தில் நகர்ப்புற பகுதிகளிலிருந்து பகுதிகளில் விலகி தனித்து வாழும் போக்கைக் கொண்ட இத்தகைய பழங்குடியினர், தங்கள் வாழ்க்கை முறையில் ஆழமாகப் பதிந்திருக்கும் விசித்திரமான பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் கொண்டுள்ளனர். சொல்லப்போனால் அவர்கள் இந்த உலகத்திலேயே தனி உலகில் வாழ்கின்றனர், அதுவே அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அனைவரிடமும் தூண்டுகிறது.
ஹிம்பா பழங்குடியினர் ஏன் குளிப்பதை விரும்புவதில்லை?
உலகின் மிகவும் சுவாரஸ்யமான பழங்குடியினர்களில் ஹிம்பா இனக்குழுவும் ஒன்றாகும். இவர்கள் ஆப்பிரிக்காவின் வடக்கு நமீபியாவில் வசிக்கும் பழங்குடியினராவர். ஹிம்பா இன மக்கள் பல நூற்றாண்டுகளாக வெளி உலகத்திலிருந்து விலகி, தங்களின் தனித்துவமான பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய அவர்களின் விசித்திரமான நம்பிக்கை, ஏனெனில் அவர்கள் குளிப்பதை வெறுக்கிறார்கள்.
உண்மைதான், ஹிம்பா கலாச்சாரத்தில் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் தினமும் குளிக்கும் வெளிப்புற உலகத்தைப் போலல்லாமல், ஹிம்பா மக்கள் எந்த வகையிலும் குளிப்பதில்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை, திருமணத்தின் போது மட்டுமே குளிக்கிறார்கள். இந்த விசித்திரமான பழக்கம் மற்றவர்களுக்கு நாகரிகமற்றதாகத் தோன்றினாலும், அது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
ஹிம்பா பெண்களின் பழக்கவழக்கங்கள்
ஹிம்பா மக்கள் தண்ணீருடன் அதிக நேரம் செலவிடுவதில்லை என்பதால், அவர்கள் தாங்களாகவே தூய்மையாக இருக்கும் திறனை வளர்த்துக் கொண்டனர். பெரும்பாலான மக்கள் பின்பற்றும் குளியல் முறைக்குப் பதிலாக, ஹிம்பா மக்கள் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் கொல்லும் புகைக் குளியலை பின்பற்றுகின்றனர். அவர்கள் தனித்துவம் வாய்ந்த சிறப்பான மூலிகைகளை எரிப்பதால் உருவாகும் புகையைக் கொண்டு குளிக்கவும், பூச்சிகளை விரட்டவும் செய்கிறார்கள்.
புகைக் குளியலுடன், கொதிக்கவைத்த தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் நீராவிக் குளியல்களையும் ஹிம்பா பெண்கள் ஒரு தூய்மைப்படுத்தும் சடங்காகப் பயன்படுத்துகின்றனர். இது சுகாதாரமானதாக மட்டுமல்லாமல், உடல் துர்நாற்றத்தையும் நீக்க உதவுகிறது. அவர்கள் வாழும் பகுதி மிகவும் வறண்ட பகுதியாக இருப்பதால் இது மிகவும் பயனுள்ள வழிமுறையாக உள்ளது.
ஹிம்பா பழங்குடிப் பெண்களின் அழகு இரகசியங்கள்
ஹிம்பா இன பெண்கள் மிகவும் அழகான ஆப்பிரிக்கர்களில் ஒருவராக கருதப்படுகிறார்கள். அவர்களின் கவர்ச்சியின் மிகவும் வழக்கத்திற்கு மாறான கூறுகளில் ஒன்று, முடி மற்றும் தோலில் ஒரு விசித்திரமான சிவப்பு காவி நிற பசையைப் பூசுவதாகும். காவி நிறம், வெண்ணெய்க் கொழுப்பு மற்றும் நறுமண மூலிகைகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் இந்தப் பசை, அழகு மற்றும் பயன்பாடு ஆகிய இரண்டு விதமான செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. இந்த பசையானது அவர்களின் தோலைக் கடுமையான சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதோடு, பூச்சிகளையும் விரட்டி வைக்கிறது.
ஹிம்பா பெண்கள் செம்பு, சிப்பி மற்றும் பிற இயற்கைப் பொருட்களால் ஆன நுணுக்கமான நகைகளையும் அணிகிறார்கள், இந்த நகைகள் முக்கியமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்த நகைகள் அழகு, அந்தஸ்து மற்றும் பழங்குடி உறுப்பினர் தகுதியைக் குறிக்கின்றன.
ஹிம்பா பழங்குடியினரின் வாழ்க்கை முறை
ஹிம்பா மக்கள் இயற்கையோடு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளனர்; இயற்கையே அவர்களின் இருப்பின் மையமாகத் திகழ்கிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றில் ஹிம்பா மக்கள் திறமையானவர்களாக திகழ்கின்றனர். உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றில் அவர்கள் வாழ வேண்டியிருப்பதால், அப்பகுதியின் புவியியல் சார்ந்த அறிவை அவர்கள் திறம்படப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஹிம்பா பழங்குடியினரின் உணவுமுறை
சிறுதானியம் அல்லது மக்காச்சோளத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கூழ் வகையே அவர்களின் முதன்மையான உணவாகும். இதனை அவர்கள் ஒவ்வொரு வேளை உணவிலும் சேர்த்துக் கொள்கின்றனர். திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போதும், சிறப்பு தருணங்களிலும் மட்டுமே இவர்கள் இறைச்சியை உண்கின்றனர். ஹிம்பா பழங்குடியினரின் செல்வத்திற்கும் சமூக அந்தஸ்திற்கும் மிகப்பெரிய ஆதாரமாகத் திகழ்வதால், கால்நடைகளே இவர்களின் பொருளாதார மற்றும் கலாச்சார முதுகெலும்பாக விளங்குகின்றன.



Click it and Unblock the Notifications

