Latest Updates
-
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன?
குரு, ராகு, கேது பெயர்ச்சிகளால்.. மே மாதம் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது!
May 2025 Planetary Transit: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மே மாதத்தில் 6 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு-கேது ஆகிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மே 14 ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்வார். அதற்கு முன் மே 06 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனான புதன் மேஷ ராசிக்குள் நுழைவார், அதன் பின் தேவர்களின் குருவான குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்வார். அதற்கு பின் மே 18 ஆம் தேதி ராகு-கேது ராசியை மாற்றவுள்ளனர்.

மாதத்தின் கடைசியில் , அதாவது மே 31 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி 6 கிரகங்கள் ராசியை மாற்றுவதால், மே மாதம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது மே மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மே மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தினசரி வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பல புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் சாதகமாக இருக்கும். அதுவும் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால், குடும்பத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பாவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மே மாதமானது சிறப்பாக, முன்னேற்றத்தைத் தருவதாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் குருவும், சூரியனும் சாதகமான வீட்டில் இருப்பதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பர செலவுகள் அதிகம் செய்ய வேண்டியிருக்கும். இம்மாதத்தில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முக்கியமாக இம்மாதத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
