Latest Updates
-
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..
18 மாதம் கழித்து கன்னி செல்லும் செவ்வாய்: ஜூலை 28 முதல் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Mars Transit In Virgo On 28 July 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் வலிமை, வீரம், தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது செவ்வாய் சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேதுவுடன் ஒன்றிணைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் ஜூலை 28 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது புதனின் கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இந்த கன்னி ராசிக்கு செவ்வாய் சுமார் 18 மாதங்களுக்கு பின் செல்கிறார்.

செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இந்த அதிர்ஷ்டத்தினால் திடீர் நிதி நன்மைகளும், முன்னேற்றமும் ஏற்பட போகிறது. இப்போது 18 மாதங்களுக்கு பின் கன்னி ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இந்த வீடு வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். அதோடு புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும் வாய்ப்புள்ளது. புதிய வேலையைத் தொடங்கினால் அதில் நல்ல பலனைப் பெறக்கூடும்.
இக்காலத்தில் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். கலை, எழுத்து துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. செவ்வாய் உங்கள் ராசிநாதன் என்பதால், இந்த பெயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கை ஜொலிக்கப் போகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் பணத்தைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
முக்கியமாக இக்காலத்தில் உங்களின் இலக்குகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நம்பிக்கையுடன் எந்த முடிவுகளையும் எடுப்பீர்கள். அலுவலகத்தில் சிறப்பாக தலைமை தாங்கி உங்கள் குழுவை வழிநடத்தி வெற்றி பெற்று காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications