ஜூன் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...

Mars Transit In Krithikai Nakshatra On 16 June 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Mars Transit In Krithikai Nakshatra On 16 June 2026 List Of Lucky Zodiac Signs

அந்த வகையில் செவ்வாய் ஜூன் 16 ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் ஜூலை 05 ஆம் தேதி வரை இருப்பார். இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் முன்னேற்றம், நிதி நிலையில் உயர்வு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். இப்போது ஜூன் மாத செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். ஆற்றல் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் எதிர்பாராத லாபங்களைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள். முக்கியமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருப்பதோடு வலுவடையும்.

விருச்சிகம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுகூடையும். தனிப்பட்ட உறவுகள் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாயின் அருளால் நிலுவையில் உள்ள வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, May 29, 2026, 23:41 [IST]
Desktop Bottom Promotion