Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
10 ஆண்டுகளுக்கு பின் சனியின் நட்சத்திரத்திற்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிகளின் செல்வம் அதிகரிக்கப்போகுது..
Mars Transit In Anusham Nakshatra 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அடிக்கடி ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரையிலும், ஒரு நட்சத்திரத்தில் 20 நாட்கள் வரையிலும் இருப்பார். தற்போது செவ்வாய் துலாம் ராசியிலும், விசாகம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது செவ்வாய் அனுசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த அனுசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். செவ்வாய் சனி பகவானின் இந்த நட்சத்திரத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதுவும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, செல்வத்திலும், சொத்துகளிலும் நல்ல அதிகரிப்பு ஏற்படும். தைரியமாக பல வேலைகளை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியானது எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் கிடைக்கும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு இனிமையாக இருக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்களும் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் தீரும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலை வலுவடையும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications