Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
300 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரியில் உருவாகும் 12 சுப யோகங்கள், 4 ராஜயோகங்கள்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Maha Shivratri 2026: இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. சிவனுக்கு உரிய இந்த அற்புதமான நாளில் ஒரு அற்புதமான வான நிகழ்வு நிகழவுள்ளது. அதாவது, இந்நாளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் அரிய கிரக நிலைகளால் பல சுப யோகங்களும், ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. அதுவும் இந்த மங்களகரமான நாளில் 12 சுப யோகங்களும், 4 ராஜயோகங்களும் ஒன்றாக ஒரே நாளில் உருவாகின்றன.
அதில் முக்கியமாக கும்ப ராசியில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன் ஆகிய 4 கிரகங்கள் ஒன்றிணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாகும். இது தவிர இந்நாளில் ப்ரீத்தி, ஆயுஷ்மான், சௌபாக்யா, சத்யா, சிவன், சுக்ல, ஷோபன், சர்வார்த்தசித்தி, சந்திரமங்கலம், திரிகிரஹி, ராஜ மற்றும் துருவ போன்ற 12 சுப யோகங்களும் உருவாகவுள்ளன. அதோடு புதாதித்ய ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் போன்ற ராஜயோகங்களும் உருவாகின்றன.

இப்படி சிவபெருமானின் ஆற்றல் நிறைந்த மகா சிவராத்திரி நாளில் உருவாகும் பல யோகங்களால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து வாழ்வில் நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். இப்போது 300 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரியில் உருவாகும் 12 சுப யோகங்கள், 4 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மகா சிவராத்திரியில் உருவாகும் பல யோகங்களால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கினால், நல்ல வளர்ச்சியைக் காணலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
சிம்மம்
மகா சிவராத்திரியில் உருவாகும் பல சுப மற்றும் ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். முக்கியமாக சிவபெருமானின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மகரம்
மகா சிவராத்திரியில் உருவாகும் ஏராளமான சுப மற்றும் ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு சொத்துக்கள் குவியும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையேயும் அன்பும் நல்லிணக்கமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



