Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
மகா சிவராத்திரி நாளில் சதுர்கிரக யோகம்: சிவன், சனியின் ஆசியால் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Maha Shivratri 2026: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்து வருவார்கள். இப்படியான நன்னாளில் சனி பகவானின் கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இப்படி 4 கிரகங்கள் ஒன்றிணைவதால் மிகவும் சக்தி வாய்ந்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
தற்போது நிழல் கிரகமான ராகு, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரனும் கும்ப ராசியில் பயணித்து வருகின்றனர். ஆனால் மகா சிவராத்திரிக்கு முன், அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மகா சிவராத்திரி நாளில் கும்ப ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் இந்த ராசிக்காரர்கள் சனி மற்றும் சிவபெருமானின் ஆசிகளைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். செலவுகள் குறையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலையில் வெற்றியைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இதுவரை சந்தித்து வந்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனால் சந்தித்து வந்த மன அழுத்தம் குறையும். செலவுகளை குறைத்தால், வங்கி இருப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலம் மேம்படும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனை அளிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்க ஒருவரது நட்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலமும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பண வரவு அதிகரிக்கும். பணப்பிரச்சனைகள் தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடுகளை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



