Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
100 ஆண்டுகள் கழித்து மகாசிவராத்திரியில் உருவாகும் சச, மாளவ்ய ராஜயோகம்.. ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்!
Maha Shivratri 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் பெயர்ச்சிகளால் அவ்வப்போது சுப மற்றும் ராஜயோகங்கள் உருவாகி, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் இப்படியான யோகங்கள் ஒரு பண்டிகை அல்லது நல்ல நாட்களில் நிகழும் போது, அது இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மகா சிவராத்திரியானது பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உருவாகின்றன. இதில் சச ராஜயோகமானது சனி பகவானால் உருவாகிறது. அதே சமயம் மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரனால் உருவாகிறது. இப்படி இவ்விரு கிரகங்களால் உருவாகும் ராஜயோகங்களானது மகா சிவராத்திரி நாளில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.

இந்த ராஜயோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக பண பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப்போகிறது. இப்போது 100 ஆண்டுகள் கழித்து மகாசிவராத்திரியில் உருவாகும் சச, மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகா சிவராத்திரியில் உருவாகும் சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியும் லாபமும் கிடைக்கலாம். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்களால் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் உருவாகும் சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் தொழில் ரீரியாக சிறப்பான நன்மைகள் கிடைக்கப் போகிறது. பணிபுரிபவர்களின் வேலைகள் வெற்றிகரமாக முடியும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊடகம், மார்கெட்டிங், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும்.
கும்பம்
மகா சிவராத்திரியில் உருவாகும் சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வேலையில் இருந்த தடைகள் நீங்கி, வெற்றிகள் குவியும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications