Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சிம்ம ராசியில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கப்போகுதாம்...!
ஜோதிடத்தில், நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சில கிரகங்கள் பல வருடங்களாக ஒரே ராசியில் இருக்கும் அதே சமயம் சில கிரகங்கள் வாரக்கணக்கில் மட்டுமே இருக்கும். இந்த ராசி மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்புகளை உருவாக்கும். சுக்கிரன் மற்றும் கிரகங்களின் இளவரசன் புதன் இந்த மாதம் சில முக்கியமான ராசி மாற்றங்களைச் செய்கிறார்கள்.

ஜூலை 19 அன்று, புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதன் பிறகு ஜூலை 31ம் தேதி சுக்கிரனும் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சிம்மத்தில் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகும். பொதுவாக ராஜயோகங்களில் இது மிகவும் மங்களகரமான ராஜயோகமாகும். இந்த ராஜயோகத்தின் மூலம் மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் அமையப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு ஐந்தாம் வீட்டில் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதன் மூலம் மேஷ ராசிக்காரர்கள் அனைத்துத் துறைகளிலும் வெற்றியும், முன்னேற்றமும் அடைவார்கள். நீண்ட காலம் முடிக்காமல் இருந்த காரியங்கள் இந்த மாதத்தில் முடிவடையும். குடும்பத்திலும் மகிழ்ச்சி பெருகும் சூழல் ஏற்படும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான பயணம் செய்யலாம்.
எதிர்பாராத நிதி அதிர்ஷ்டம் உண்டாகும், இது நிதி நிலைமையை மேம்படுத்தும். வாகனம் அல்லது பிற சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகள் தேடிவரலாம். இது ஆரோக்கியத்திற்கு சாதகமான நேரம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இது பொதுவாக வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
மிதுனம்
லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசியில் மூன்றாம் வீட்டில் உருவாகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க வாய்ப்புக் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். வேலையில் சூழ்நிலைகள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், அதனால் வேலையில் அதிக திருப்தி கிடைக்கும். பணியில் சிறப்பாக செயல்படுவதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இதனால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வேலை சம்பந்தமாக அதிக பயணங்கள் செய்ய நேரிடலாம். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கும். பல ஆண்டுகளாகத் திரும்பக் கிடைக்காத பணம் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. சிங்கிளாக இருபவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்கும். யோசித்து முடிவெடுக்க ஆரம்பியுங்கள். திட்டமிட்ட பணிகள் பல நிறைவேறும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களின் லக்ன பாவத்தில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இந்த காலம் முழுவதும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட பணிகள் முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். புதிய வருமான ஆதாரங்கள் அமையும்.
திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி தேடிவரும், குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடிவரும். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
