Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நவம்பர் 10 முதல் இந்த 3 ராசிக்கு ராஜயோக காலமா இருக்கப்போகுது...
Ketu Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்பட்டாலும், அவை ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய கிரகங்களாகவும் கருதப்படுகின்றன. ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒன்றாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியுடன், நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இதில் கேது ஒரு முக்தி தரும் கிரகமாக கருதப்படுகிறது.
தற்போது கேது அஸ்தம் நட்சத்திரத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற நவம்பர் 10 ம் தேதி கேது பூரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். கேது ராசி மாற்றத்தின் போது மட்டுமின்றி, நட்சத்திர மாற்றத்தின் போதும் பின்னோக்கி தான் பயணிப்பார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இந்த பூரம் நட்சத்திரத்திற்கு நவம்பர் 10 ஆம் தேதி செல்லும் கேது, அந்த நட்சத்திரத்தில் 2025 ஆம் ஆண்டின் ஜூலை 20 ஆம் தேதி வரை இருப்பார். பூர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். கேது பூர நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். அதுவும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆரோக்கியம் சற்று மோசமாக பாதிக்கப்படலாம். குழந்தைகளைப் பற்றிய கவலை சற்று அதிகரிக்கலாம். ஆனால் போகபோக அனைத்தும் சரியாகிவிடும்.
கடகம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். சமூக ஊடகங்கள், ஆன்மீகம், நிதி தொடர்பான வேலைகளை செய்பவர்கள் கேதுவின் ஆசியால் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆனால் 2025 ஆம் ஆண்டு சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்பட நேரிடும். அத்துடன் நிதி பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது நட்சத்திர பெயர்ச்சியால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குருவின் பார்வை விழுவால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். அதோடு நிறைய பணத்தை சம்பாதிக்கவும் முடியும். ஆனால் 2025 ஆம் ஆண்டு சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications