Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
குரு சுக்கிரன் உருவாக்கும் சமசப்தக் ராஜயோகம்: அக்டோபரில் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது
Jupiter Venus Will Make Samsaptak Rajyog 2024: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு, நவகிரகங்களில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதால், இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். தற்போது குரு ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 09 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 13 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் குரு மற்றும் சுக்கிரனின் நிலையால் சமசப்தக் ராஜயோகமானது உருவாகவுள்ளது.

இவ்விரு கிரகங்களால் உருவாகவுள்ள சமசப்தக் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது. இந்த ராஜயோகமானது நவம்பர் 07 வரை நீடித்திருப்பதால், இக்கால கட்டத்தில் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். இப்போது சமசப்தக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
சமசப்தக் ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கினால் சிறப்பான பலனைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். மேலும் முதலீடுகள் செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அது முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சமசப்தக் ராஜயோகமானது பலவிதமான நன்மைகளை வழங்கவுள்ளது. முக்கியமாக வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வியாபாரிகளுக்கு சில புதிய யோசனைகள் தோன்றும். அந்த யோசனைகளானது நல்ல லாபத்தைக் கொண்டு வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, சொத்து வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தக் ராஜயோகமானது நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்யும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். இது தவிர வேறுபல ஆசைகளும் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது இக்காலத்தில் முடிவுக்கு வரும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை எதிரிகளால் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
