Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம்: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது..
Gajkesari Rajyog On 24 June 2025: ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான மற்றும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. தேவர்களின் குருவாக கருதப்படும் குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வர். இப்படிப்பட்ட குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் நுழைந்துள்ள குரு பகவான், அதன் இயல்பான வேகத்தை விட இரண்டு மடங்கு வேகமாக நகர்கிறார். அதாவது ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான், வெறும் 5-6 மாதங்களில் ராசியை மாற்றவுள்ளார்.

இப்படியான நிலைமை 1-2 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, சுமார் 8 ஆண்டுகளுக்கு நீடிக்கும். தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் குரு பகவான் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து, சில யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் குரு பகவான் வருகிற ஜூன் 24 ஆம் தேதி சந்திரனுடன் ஒன்றிணைந்து கஜகேசரி என்னும் சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர். இப்போது கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உறவினர்களுடனான உறவு வலுவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நற்செய்திகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சமூகத்தில் அதிக செல்வாக்கு உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நீண்டகால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வேலையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
