Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
2026 தொடக்கத்தில் ஒன்றிணையும் செவ்வாய்-சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசித்து செல்வம் குவியபோகுது!
Mars Venus Conjunction 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் 1 மாதத்தில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கமே மிகவும் சிறப்பானது.
ஏனெனில் ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்களின் நிலைகளால் பல்வேறு ராஜயோகங்கள் உருவாகின்றன. மேலும் இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மகர ராசியில் நுழையவுள்ளார். இந்த மகர ராசியில் ஏற்கனவே அசுரர்களின் குருவாக கருதப்படுபவரும் மற்றும் செல்வத்தை அளிப்பவருமான சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் மகரத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் பணப்பிரச்சனைகள் தீர்ந்து, செல்வம் மற்றும் சொத்துக்களில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்றிணையும் செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய வீடு, வானம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தாயாருடனான உறவு சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உறவினர்களுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
