Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
2025-ல் இந்த 4 ராசிக்காரர்கள் பெரிய பணக்கஷ்டத்தை சந்திக்கப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: 2025 ஆம் ஆண்டு வரப்போகிறது. எனவே கிரக நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்கையிலும் குறிப்பிட்ட மாற்றங்கள் வரப்போகிறது. அனைவருக்குமே வரப்போகிற ஆண்டு தங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும், ஆனால் அனைவருக்கும் அப்படி நடப்பதில்லை.
2025-ல் நடக்கப்போகும் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை தரப்போகின்றன. இந்த மாற்றங்கள் நிகழும்போது, சில ராசிக்காரர்கள் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 2025- எந்தெந்த ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்தைச் சந்திக்கப் போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்களின் கடந்த கால பிரச்சனைகள் இந்த வருடமும் தொடரும். அவர்களின் நிதிச் சிக்கல்கள் அவர்கள் நினைத்தது போல எளிதில் முடிவுக்கு வராது. அதுமட்டுமின்றி வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.
வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், முதலீட்டையும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் மேலே வர முடியாத நிலை ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் பாதகமான சூழ்நிலைகளை அனுபவிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், இதனால் மனஅமைதி குலையும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் 2025-ல் பண விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் ஆண்டின் தொடக்கத்திலேயே பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகலாம். பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறக்கூடும், ஆனாலும் நிதிநிலை மோசமாகவே இருக்கும். சொத்துக்களை விற்றாலும் பெரும் நஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு இந்த வருடம் எதிர்பார்த்தபடி சாதகமாக இருக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் 2025-ல் பல பின்னடைவுகளை சந்திப்பார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கும் வலிமை உங்களுக்கு கிடைக்கும். நெருங்கியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 2024-ல் தொடங்கிய நிதி பிரச்சினைகள் இந்த வருடமும் தொடரும். மேலும் மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்காது.
உடல் நலத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அது பெரும் பணக்கஷ்டத்தை ஏற்படுத்தும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகலாம். இந்த வருடம் உங்கள் நெருங்கியவர்களுடன் அதிக வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2025 நல்ல பலன்களைக் கொடுக்காது. பெரும்பாலும் அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடிகளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். காதலில் உள்ளவர்களுக்கு, இந்த வருடம் பிரியும் சூழலை ஏற்படுத்தலாம். எதிர்பார்த்த செலவுகள் அதிகரிக்கும், ஆனால் அதற்கேற்ற வருமானம் இருக்காது.
செலவு முதல் வார்த்தைகள் வரை அனைத்திலும் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில், அது உங்களை மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும். குடும்பத்தின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கவனமாக இல்லையெனில் இந்த வருடம் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

