Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அக்டோபர் மாத குரு பெயர்ச்சியால் கோடி நன்மைகளைப் பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்!
Guru Peyarchi 2025: வேத ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகங்களுள் ஒருவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். மேலும் இவர் அறிவு, திருமணம், செல்வம், கல்வி, அதிர்ஷ்டம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார்.
இப்படிப்பட்ட குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு குரு பகவான் 3 மடங்கு வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே இந்த ஆண்டு குரு பகவான் ஒரு ராசியில் மட்டுமின்றி, 3 ராசிகளில் பயணிப்பார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் அதன் உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி கடக ராசியில் குரு நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கும்.
ஜோதிடத்தின் படி, குரு பகவான் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியில் பயணித்து வந்தால், அதன் பின் மே 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இருப்பினும் இந்த கடக ராசியிலும் நீண்ட காலம் இருக்கமாட்டார். நவம்பர் 11 ஆம் தேதி வக்ரமடைந்து, பின் டிசம்பர் 04 ஆம் தேதி மிதுன ராசிக்குள் மீண்டும் நுழைவார். இப்போது குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வின் பல பகுதிகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலிலும் நல்ல நன்மைகளைப் பெறக்கூடும். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்திலும், தொண்டுகளிலும் நாட்டம் அதிகரிக்கும். சொத்து விஷயங்களில் நல்ல நன்மைகளைப் பெறக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டு வசதிகளும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனதில் இருந்த கஷ்டங்கள் குறையும். மனக்குழப்பம் நீங்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆசிரியர்களாக இருந்தால் அவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண உறவில் இருந்த பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications