Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள குரு மங்கள ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது..
Guru Mangal Rajyog 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகங்களையும் உருவாக்கும். அப்படி உருவாகும் ராஜயோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மங்களகரமான கிரகமான குரு தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் ஜூலை 12 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இதனால் ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் ஒன்றிணைந்து குரு மங்கள ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ராஜயோகமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இப்போது குரு மங்கள ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு மங்கள ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு மங்கள ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் குரு மங்கள ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உங்களின் மரியாதையும், புகழும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்சசயாகவும் இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications