Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
ரிஷபத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்துல இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Gajkesari Rajyog In Taurus On 02 April 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களில் மிகவும் வேகமாக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தான் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் தான் பயணிப்பார். இவர் கடக ராசியின் அதிபதியாவார். இந்த சந்திரன் வருகிற ஏப்ரல் 02 ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் ரிஷப ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை அளிக்கப் போகிறது. இதன் விளைவாக திடீர் நிதி ஆதாயங்கள் மற்றும் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுடன் நட்பு கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் நல்ல பலனளிக்கும்.
மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வைக் காண்பார்கள். வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பதோடு, லாபத்தையும் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் எதிர்பாராத உயரத்தை அடையலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி ரீதியாக இந்த ராஜயோகம் நன்மை பயக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை தேடி வரும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்களும் தேடி வரும்.
பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் இடமாற்றத்தை விரும்பினால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications