Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
84 ஆண்டுகளுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகும்...
Diwali 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இவ்வாறு உருவாகும் யோகங்கள் பண்டிகை காலங்கள் அல்லது சுப தினங்களில் நிகழும் போது இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை மிகவும் அற்புதமானது. ஏனெனில் இந்த தீபாவளி பண்டிகையில் பல சுப மற்றும் ராஜயோகங்கள் உருவாகின்றன. அதுவும் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 14 ஆம் தேதி யுரேனஸ் உடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.

இந்த ராஜயோகத்தின் போது சுக்கிரனும், யுரேனஸும் 120 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர்.
இதன் விளைவாக நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. அதோடு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரக்கூடும். இப்போது தீபாவளிக்கு முன் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை செய்தால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக சுக்கிரனின் அருளால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் நல்ல பொருள் வசதிகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களின் திறமைகள் நல்ல பாராட்டைப் பெறும். சுக்கிரனின் அருளால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பல வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல அதிகரிக்கும் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் இன்று முதல் சிறப்பாக இருக்கப்போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கம் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
