Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
தீபாவளிக்கு முன் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Diwali 2025 Jupiter Transit In Cancer: பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி வருகிறது. இந்த அக்டோபர் மாதத்தில் தான் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் குரு பகவான், தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார். இந்த கடக ராசிக்குள் குரு பகவான் 12 ஆண்டுகுளுக்கு பின் நுழையவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது தீபாவளிக்கு முன் நடக்கும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 10 வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அதுவும் வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். குருவின் அருளால் வேலைகளில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். வருகிற தீபாவளியில் எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் ஆசை இருந்தால், இந்த குரு பெயர்ச்சிக்கு பின் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணை யத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications