Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
100 ஆண்டுகளுக்கு பின் தீபாவளியில் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Diwali 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் இந்த கிரகங்களால் உருவாகும் யோகங்கள் இன்னும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்குகின்றன. வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி வருகிறது.
இந்த தீபாவளி பண்டிகைக்கு முன் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த ஹன்ஸ் ராஜயோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி நாளில் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தீபாவளி நாளில் இந்த ராஜயோகம் நீடித்ருப்பதால், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக வருமானத்தில் கணிசமான உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன.
மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது தீபாவளியில் உருவாகியுள்ள ஹன்ஸ் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குருவால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மேம்படும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஆன்மீபத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு தீபாவளிக்கு பின் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











