Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
சித்திரை மாத ராசிபலன் 2025: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Chithirai Month Horoscope 2025 Lucky Zodiac Signs: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். ராசிகளில் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதால் தமிழ் மாதங்களுள் முதல் மாதமான சித்திரை பிறக்கப்போகிறது. சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் சூரியனின் சிறப்பான ஆசீர்வாங்களைப் பெறவுள்ளனர்.

இதன் மூலம் அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் சித்திரை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். புதிய வீடு மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி ரீதியாகவும் மிகவும் சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் ஆர்டர்களைப் பெறலாம் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் சித்திரை மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களையும் தரும்.
இம்மாதத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications