Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்..
Chandra Grahan In Aquarius On 28 August 2026: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகணமானது இந்திய நேரப்படி, காலை 6.53 மணிக்கு தொடங்கி, மதியம் 12.31 மணிக்கு முடிவடைகிறது. பகல் வேளையில் இந்த சந்திர கிரகணம் நிகழ்வதால், இதன் சூதக் காலம் இந்தியாவில் செல்லுபடியாகாது மற்றும் இந்தியாவில் இதைக் காணவும் முடியாது. இருப்பினும் ஜோதிடத்தின் படி, கிரகணம் ஒரு மோசமான நிகழ்வாக கருதப்படுகிறது. அதுவும் இந்த கிரகணம் சனி பகவானின் கும்ப ராசியில் நிகழ்கிறது.

இதனால் இந்த கிரகணத்தின் எதிர்மறை விளைவுகள் பலமடங்கு அதிகமாக இருக்கும். இதன் விளைவு அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் வாழ்வில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். குறிப்பாக ஆரோக்கியத்திலும், தொழிலிலும் எதிர்பாராத பிரச்சனைகளை கொண்டு வரும். இப்போது கும்ப ராசியில் நிகழும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இதன் விளைவாக மன அழுத்தம் அதிகரித்து, ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். எனவே இதைத் தவிர்க்க போதிய ஓய்வை எடுப்பதோடு, ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கன்னி
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கன்னி ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உங்களின் வார்த்தைகள் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இருந்தாலும், கடின உழைப்புக்கு ஏற்ற ஓரளவு பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இந்த கிரகண காலத்தில் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் உங்களின் சிறிய அலட்சியம் பெரிய இழப்பை ஏற்படுத்தும். வியாபாரிகள் லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு புதிய திட்டங்களை போடும் போதும் மற்றும் செயல்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

