Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
2026-ல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் நல்ல வெற்றியையும், வளர்ச்சியையும் காண்பார்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Career Horoscope 2026: இன்னும் சில நாட்களில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டை அனைவருமே ஒரு புதிய கனவுடனும், நம்பிக்கையுடனும் தொடங்குவோம். ஆனால் இந்த ஆண்டில் கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் வாழ்வில் பல மாற்றங்களை காண்பார்கள். குறிப்பாக தொழிலில் எதிர்பாராத மாற்றங்களைக் காணும் வாய்ப்புள்ளது.
நவகிரகங்களில் தொழில், வியாபாரம் ஆகியவற்றின் காரணி தான் புதன். இந்த புதனின் ஆசி ஒருவருக்கு கிடைத்தால் மற்றும் ஜாதகத்தில் புதன் சாதகமான நிலையில் இருந்தால், அந்நபர் தொழிலில் கொடிகட்டி பறப்பார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் மூன்று ராசிக்காரர்கள் புதன், குரு மற்றும் சனி பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறவுள்ளனர்.

இதன் விளைவாக அந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறவுள்ளனர். வணிகர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். இப்போது 2026 ஆம் ஆண்டில் தொழிலில் புதிய உயரங்களைத் தொடப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
2026 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த புதிய ஆண்டில் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்படலாம். வணிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அற்புதமானதாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு இந்த புதிய ஆண்டில் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்குவார்கள். ரியல் எஸ்டேட், ஃபேஷன், நிதி மற்றும் ரெஸ்டாரண்ட் தொழில் செய்பவர்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிய முதலீடுகளை செய்தாலும், இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும்.
சிம்மம்
2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதோடு, மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஊடகம், ஐடி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு துறையுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் இந்த ஆண்டில் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ஆண்டில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
