Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
Budhaditya Rajyog In Virgo On September 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் நிலைகளால் சில சுப மற்றும் ராஜயோகங்கள் அவ்வப்போது உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் செப்டம்பர் 23 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவிருக்கிறார். இதனால் கன்னியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகம் புதனின் சொந்த ராசியில் 1 வருடத்திற்கு பின் நிகழவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கப் போகிறது. இப்போது கன்னியில் உருவாகவுள்ள புதாத்திய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் விளைவாக உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பல வழிகளில் உதவியாக இருக்கும் புதிய நட்பு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அறிவாற்றல் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இதன் மூலம் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். முதலீடுகளை ஏற்கனவே செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
