Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ஆபத்தான அங்காரக யோகம்: டிசம்பர் 07 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...
Angarak Yog 2025: ஜோதிடத்தின் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். தற்போது செவ்வாய் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த விருச்சிக ராசியில் டிசம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். இக்காலகட்டத்தில், செவ்வாய் மற்ற கிரகத்துடன் சேர்ந்தோ அல்லது அம்சங்களின் மூலமோ யோகங்களை உருவாக்கலாம். அந்த வகையில் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து ஆபத்தான அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளார். இது மிகவும் மோசமான யோகங்களுள் ஒன்று.

ஜோதிடத்தின் படி, செவ்வாய் அக்டோபர் 27 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த செவ்வாய் மகர ராசியின் 11 ஆவது வீட்டில் இருந்து கும்ப ராசியை பார்த்து ராகுவுடன் சேர்ந்து அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகரிப்பதோடு, முடிவெடுக்கும் திறன் குறையும். அதோடு ஆக்கிரமிப்பு, ஆற்றல், மனக்கிளர்ச்சி போன்றவையும் அதிகரிக்கும். இப்போது செவ்வாய் ராகுவால் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
அங்காரக யோகத்தால் மகர ராசிக்காரர்கள் டிசம்பர் வரை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சு கோபம் நிறைந்து இருக்கும். இது உங்களின் வேலையை சீர்குலைக்கும். மேலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் யோசிக்காமல் முடிவெடுத்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். டிசம்பர் வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பேச்சே பல பிரச்சனைகளைக் கொண்டு வந்துவிடும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை காணக்கூடும்.
கடகம்
அங்காரக யோகத்தால் கடக ராசிக்காரர்கள் டிசம்பர் வரை சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கூடுதலாக பெற்றோரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக டிசம்பர் வரை தன்னம்பிக்கை குறைவதைக் காணக்கூடும்.
கும்பம்
அங்காரக யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வேலையை எடுத்தாலும், அதை முடிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். ஒவ்வொரு வேலையையும் யோசித்து செய்தால், மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications