Akshaya Tritiya 2025: அட்சய திருதியை நாளில் உங்க ராசிப்படி என்ன வாங்கினால் அதிர்ஷ்டமாக இருக்கும் தெரியுமா?

Akshaya Tritiya 2025: இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் புனிதமான நாட்களுள் ஒன்றாகும். இந்நாளில் எந்த பொருளை வாங்கினாலும், அது பெருகும் என்பது நம்பிக்கை. அதுவும் நிறைய பேர் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதை நல்லதாக கருதி, அதை வாங்குவார்கள். மேலும் இந்த நாளில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசியால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இது தவிர இந்த நாளில் தானங்களை செய்வதும் மிகவும் நல்லது.

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் அட்சய திருதியை மிகவும் விஷேசமானது. ஏனெனில் இந்த அட்சய திருதியை திதியானது ரோகிணி நட்சத்திரத்தன்று வருகிறது. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். எனவே இந்த அட்சய திருதியை நாளில் ஒருவரது அதிர்ஷ்டம் அதிகரிக்கவும், செல்வம் பெருகவும், ஒருசிலவற்றை வாங்குவது நல்லது.

Akshaya Tritiya 2025 What To Buy And Donate According To Your Zodiac Sign For Good Luck and Wealth

அதுவும் ஒருவர் ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்போது அட்சய திருதியை நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கலாம் அல்லது எந்த பொருட்களை தானம் செய்யலாம் என்பது குறித்துக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் வெள்ளி அல்லது தங்க நாணயங்களை வாங்குவது நல்லது. இது உங்கள் விருப்பத்தையும் முடிவுகளை எடுக்கும் திறனையும் வலுப்படுத்த உதவும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள் அல்லது வெல்லத்தை தானமாக கொடுப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் தங்க ஆபரணங்கள், வெள்ளியால் ஆன லட்சுமி சிலை அல்லது நிலத்தை வாங்குவது நல்லது. இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஸ்வீட், பால், அரிசி தானம் அல்லது ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் மொபைல், லேப்டாப், புத்தங்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் மரகதம் போன்ற பச்சை நிற நகைகளை வாங்குவதும் நல்லது. இந்த ராசிக்காரர்களின் அதிபதி புதன் என்பதால் இந்த ராசிக்காரர்கள் பென்சில், பேனா, பச்சை நிற ஆடைகளை வழங்குவது அல்லது மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்து உதவுவது போன்றவற்றை செய்யலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் வீட்டு அலங்கார பொருட்கள், வெள்ளி பொருட்களை போன்றவற்றை வாங்கலாம். மேலும் நிலங்களில் முதலீடு செய்வது பற்றியும் யோசிக்கலாம். கடக ராசியின் அதிபதி சந்திரன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் சந்திரன் தொடர்பான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும். மேலும் இவர்கள் பால் சார்ந்த இனிப்புகள், வெள்ளை நிற ஆடைகள், ஏழை மக்களுக்கு தேவையான பொருட்களை தானம் செய்யலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் தங்க நகைகள், ஆடைகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இந்த ராசியின் அதிபதி சூரியன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் வெல்லம், கோதுமை அல்லது குழந்தைகளின் கல்வி அல்லது படைப்புத் திட்டங்களுக்கு உதவுவது உங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் வழிவகுக்கும்.

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் அட்சய திருதியை நாளில் தங்க நாயணங்கள், செடிகள், ஆர்கானிக் உணவுக் கூடைகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இந்த ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் மருந்துகள், பச்சை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்வது, இவர்களின் தனிப்பட்ட ஆற்றல் புலத்தை மேம்படுத்த உதவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் சமநிலையையும் கவர்ச்சியையும் மேம்படுத்தும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும் இவர்கள் வாசனை திரவியங்கள் மற்றும் நாகரீக நகைகளை வாங்குவது, சட்ட சேவைகளில் முதலீடு செய்வதும் நல்லது. இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இவர்கள் வெள்ளை நிற இனிப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை தானமாக வழங்குவது, ஏழை எளியோரின் திருமண செலவுகளுக்கு நிதியளிப்பது போன்றவை செல்வ செழிப்பிற்கு உதவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் கருப்பு ரூர்மலைன் படிகங்களை வாங்குவது, பரம்பரை நிலத்தை வாங்குவது போன்றவை பெருமளவில் நன்மைகளைத் தரும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற பருப்பு மற்றும் குங்குமப்பூவை தானம் செய்வது, மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவுவது போன்றவற்றை செய்வது அவர்களின் உள்சக்தியை பலப்படுத்தும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் புத்தகங்கள், ருத்ராட்சம், குதிரை சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட விஷ்ணு சிலைகள் போன்றவற்றை வாங்குவது செல்வத்தை அதிகரிக்கும். தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால், இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிற இனிப்புகளை தானமாக வழங்குவது மற்றும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிதியளிப்பது போன்றவற்றை செய்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது, நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது போன்றவற்றை செய்து வந்தால், சொத்துக்கள் அதிகரிக்கும். இந்த மகர ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் கருப்பு எள்ளு, போர்வைகள் போன்றவற்றை தானம் செய்வதோடு, தொழிலாளர்களுக்கு உதவி செய்வது போன்றவற்றை வாழ்வில் முன்னேற்றத்தையும், நிதி நன்மைகளையும் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் நீல சபையர் போன்ற நீல ரத்தினக் கற்கள், வெள்ளி நகைகளை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் என்பதால், இந்த ராசிக்காரர்கள் உணவு தானம் அல்லது ஏழை எளியோருக்கு வேண்டியதை வாங்கி கொடுப்பது என எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் சங்கு, ஆன்மீக புத்தகங்கள், ஓவியங்கள், இசைக்கருவிகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. அதுவும் இவர்கள் வெள்ளி விஷ்ணு சிலையை வாங்குவது மிகவும் நல்லது. மீன ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால், இந்த ராசிக்காரர்கள் அத்தியாவசிய பொருட்களை தானம் செய்வது, உணவு கொடுப்பது, படைப்புத் திறன்களை ஊக்குவிப்பது அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது போன்றவற்றை செய்வது மிகவும் நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, April 28, 2025, 23:17 [IST]
Desktop Bottom Promotion