Aippasi Pournami 2025: ஐப்பசி பௌர்ணமி நாளில் உங்க ராசிப்படி இவற்றை தானம் செய்யுங்க.. கைமேல் பலன் கிட்டும்!

Aippasi Pournami 2025: ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளன. அதில் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டில் இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் தான் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமியானது நவம்பர் 05 ஆம் தேதி வருகிறது. இந்த பௌர்ணமி நாளில் சிவபெருமானை தரிசனம் செய்வது மட்டுமல்லாமல், இந்நாளில் தானம் செய்வதும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

Aippasi Pournami 2025 Donate These Things According To Your Zodiac Signs On Kartik Purnima

புராணங்களின் படி, ஐப்பசி பௌர்ணமி நாளில் ஒருவர் தங்களின் ராசிக்கேற்ப தானம் செய்வது பலமடங்கு நன்மைகளை வழங்கும். அதுவும் இந்த நாளில் செய்யப்படும் தானம் ஒரு நபரின் அனைத்து பாவங்களையும் அழித்து, செல்வம், செழிப்பு மற்றும் தெய்வீக அருளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது ஐப்பசி பௌர்ணமி நாளில் எந்த ராசிக்காரர்கள் எதை தானம் செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள், தேன், சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை தானம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் ஆற்றல், தைரியம் மற்றும் செல்வம் அதிகரிப்பதோடு, கடனில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ரிஷபம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் அரிசி, நெய், தயிர் அல்லது வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்வது நல்லது. இவ்வாறு செய்வதனால் பொருள் வசதிகளும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

மிதுனம்

புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் பச்சை பயறு, காய்கறிகள், பச்சை நிற ஆடைகள் மற்றும் எழுது பொருட்களை தானம் செய்யலாம். இது தொழிலில் சந்திக்கும் தடைகளை நீக்கி, முன்னேற்றத்தைத் தரும்.

கடகம்

கடக ராசியைச் சேர்ந்தவர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் வெள்ளை நிற இனிப்புகள், வெள்ளி, சர்க்கரை அல்லது தண்ணீர் போன்றவற்றை தானம் செய்யலாம். இப்படி செய்வதனால் அது மன அமைதியையும் செழிப்பையும் தரும்.

சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் செம்பு பாத்திரங்கள், வெல்லம், ஆரஞ்சு நிற ஆடைகள் மற்றும் சிவப்பு நிற பூக்களை தானமாக செய்யலாம். இது தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, மரியாதையையும் அதிகரிக்கும்.

கன்னி

புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் பச்சை பயறு, பச்சை காய்கறிகள் அல்லது பச்சை நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது. இப்படி செய்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொண்டு வரும்.

துலாம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் பௌர்ணமி நாளில் வெள்ளை நிற ஆடைகள், வாசனை திரவியம், அரிசி, நெய் போன்றவற்றை தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதனால் செல்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் வெல்லம், பருப்பு, சிவப்பு நிற பழங்கள் அல்லது பணத்தை தானம் செய்வது நல்லது. இது வேலையில் உள்ள தடைகளை நீக்கி, வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.

தனுசு

குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகள், வாழைப்பழங்கள், கொண்டைக்கடலை, குங்குமப்பூ அல்லது மஞ்சளை தானம் செய்யலாம். இது நல்ல செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.

மகரம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் எள்ளு விதைகள், கடுகு எண்ணெய், உளுத்தம் பருப்பு மற்றும் போர்வைகளை தானம் செய்வது நல்லது. இப்படி செய்வதனால் சனியின் தாக்கம் குறைவதோடு, தொழிலில் உள்ள தடைகளும் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் கருப்பு நிற போர்வை, கருப்பு உளுத்தம் பருப்பு, கருப்பு எள்ளு அல்லது காலணிகளை தானம் செய்யலாம். இதன் மூலம் நிதி நிலை மேம்படும்.

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வது நல்ல பலனைத் தரும். இப்படியான செயலால் லட்சுமி தேவியின் ஆசி கிடைப்பதோடு, நிதி சிக்கல்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 4, 2025, 20:56 [IST]
Desktop Bottom Promotion