Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்..

Aippasi Matha Rasi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும். நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைத்துவம், ஆன்மா, தந்தை, அதிகாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார்.

Aippasi Matha Rasi Palan 2026 List Of Unlucky Zodiac Signs

தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் நவம்பர் 17 ஆம் தேதி வரை இருப்பார். சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவதால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கிறது. இந்த ஐப்பசி மாதமானது சூரியன் மற்றும் பிற கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம்.

இப்போது சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவதால் பிறக்கும் ஐப்பசி மாதமானது எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஐப்பசி மாதத்தில் வேலைகளை முடிக்க கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இம்மாதத்தில் உங்கள் கருத்தை முன்வைக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வணிகர்கள் எந்த ஒரு திட்டமின்றியும் எந்த வேலையையும் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை சமநிலையில் வைத்துக் கொள்ள தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முதலீடுகளையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஐப்பசி மாதமானது கன்னி ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். தன்னம்பிக்கை குறையலாம். மேலும் வேலையில் தொடர்ச்சியான தடைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். இதனால் உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் பழகும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் பெரிய முதலீடுகளை செய்யும் முன் அல்லது வணிக முடிவுகளை எடுக்கும் முன், திட்டமிட்டு செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஐப்பசி மாதத்தில் தொழிலதிபர்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சில காலம் பொறுமையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் முன் அதன் விதிமுறைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பண பரிவர்த்தனைகளில் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். மேலும் முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, October 13, 2026, 9:48 [IST]
Desktop Bottom Promotion