Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!

Aippasi Matha Rasi Palan 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் அரசனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இதனால் புரட்டாசி மாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது.

Aippasi Matha Rasi Palan 2026 These Zodiac Signs Will Be Lucky

இந்த ராசியில் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி வரை இருப்பார். முக்கியமாக சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் போது, புதனும் இந்த ராசியில் இருப்பதால், சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. அதுமட்டுமின்றி, இந்த துலாம் ராசியில் சுக்கிரனும் இருப்பதால், 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகமும், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன.

இப்படி ஐப்பசி மாதத்தில் 3 மங்களகரமான யோகங்கள் உருவாவதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் ஐப்பசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஐப்பசி மாதத்தில் தைரியம், வீரம் போன்றவை அதிகரிக்கும். நீண்ட கால முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். முக்கியமாக நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். அதுவும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதோடு, சாதனை புரிவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஐப்பசி மாதமானது துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் மாற்றம் புதிய பொறுப்புகளைக் கொண்டு வரக்கூடும். இருப்பினும் உங்களின் வேலைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். லாபம் ஈட்டுவதற்கும் உங்கள் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஐப்பசி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வேலையில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் நிதி நிலை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகமாக முடிவடையும். உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதமாக அமையும். முக்கியமாக இம்மாதத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 12, 2026, 10:21 [IST]
Desktop Bottom Promotion