Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
150 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 2 யோகங்கள்: இன்று இந்த 5 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
Aani Pournami 2026 Lucky Zodiac Signs In Tamil: வேத நாட்காட்டியின் படி, ஆனி மாத பௌர்ணமி ஜூன் 29 ஆம் தேதி வருகிறது. இந்நாள் மிகவும் மங்களகரமான நாளாகும். ஏனெனில் இந்நாளில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பின் கஜகேசரி யோகம் மற்றும் திரிகிரக யோகம் ஆகிய இரண்டு யோகங்கள் உருவாகின்றன.

அதுவும் இந்த யோகங்களானது தேவகுரு குரு பகவான், மனதின் காரணியான சந்திரன் மற்றும் அசுரர்களின் குருவான சுக்கிரன் ஆகிய கிரகங்களால் உருவாகின்றன. இந்த அரிய நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 5 ராசிக்காரர்கள் ஆனி பௌர்ணமியில் உருவாகும் இந்த இரட்டை யோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஆனி பௌர்ணமியானது மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தரும். குறிப்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படுவதோடு, உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதோடு உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
மிதுனம்
ஆனி பௌர்ணமியானது மிதுன ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரும். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து, மனநிலை மேம்படும்.
சிம்மம்
ஆனி பௌர்ணமி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். மேலும் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து ஒன்றாக வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
ஆனி பௌர்ணமி துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கலை, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
ஆனி பௌர்ணமி தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவை திறக்கும். நீதிமன்ற விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். மாணவர்கள் படிப்பில், போட்டியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் ஒரு பெரிய பண பிரச்சனை முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





