கொள்ளு பயறு சாப்பிட்டா நிஜமாவே வெயிட் குறையுமா?... இல்ல சும்மா சொல்றாங்களா?


பெரும்பாலான பயறு மற்றும் தானிய வகைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும், கொள்ளு என்ற ஒரு தானியத்தை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். அதன் தாவரவியல் பெயர் மேக்ரோட்டிலாமா யூனிஃப்ளோரம் ஆகும், இதனை ஹார்ஸ் கிராம் என்று அழைப்பதற்கு காரணம், இது குதிரைகளுக்கும் கால்நடைகளுக்கும் உணவாக பயன்படுவதே.

இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக பயிர் செய்யப்படுகிறது. இது கார்ப்பு சுவைய உடையதாகும். எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு உணவுப் பொருள் கொள்ளு. மற்ற தானியங்களைப் போல் இந்த பிரபலமாக பேசப்படுவதில்லை என்றாலும், கொள்ளில் பல ஊட்டச்சத்துகள் பொதிந்து உள்ளன. மேலும் உடல் பருமனைக் குறைப்பதில் இதற்கு பெரும் பங்கு உள்ளது.

கலோரிகள் குறைந்த உணவு

எடை குறைப்பில் ஈடுபடும்போது நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவை கணக்கில் கொள்வது முக்கியம். கொள்ளு ஒரு குறைந்த கலோரி தானியம். ஆகவே இதனைக் குறைந்த அளவு எடுத்துக் கொள்வதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், கொள்ளு மட்டும் சாப்பிடுவதால் எடை குறைப்பு சாத்தியமாகிறது. கொள்ளு உடலின் கெட்ட கொழுப்பு அளவைக் குறைப்பதால், எடை அதிகரிப்பிற்கு வாய்ப்புகள் குறைகிறது. கொள்ளு குறைந்த கலோரி உணவாக இருந்தாலும் இதில் கார்போ ஹைட்ரேட் போதுமான அளவு இருப்பதால், எடை குறைந்தாலும், உங்கள் ஆற்றல் குறைவதில்லை.

செரிமானம் எளிதாகிறது

கொள்ளு ஒரு லேசான உணவாக இருப்பதால், செரிமான மண்டலத்திற்கு வேலை எளிதாகிறது. உடலில் கொழுப்பு வடிவத்தில் கொள்ளுசேமிக்கப்படுவதில்லை என்பதால் எடை குறைப்பிற்கு ஒரு வகையில் உதவுகிறது. மேலும், கொழுப்பை எரிக்கவும் இது உதவுகிறது. இது அஜீரணத்தை குறைப்பதில் உதவுகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்குகிறது.

கால்சியம், புரதம், மற்றும் இரும்பு

கொள்ளு , கால்சியம், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள ஒரு உணவுப் பொருள். ஆனால் இதன் அருமையை பலரும் உணர்வதில்லை. கொள்ளில் உள்ள இரும்பு சத்து ஹீமோக்ளோபின் கட்டமைப்பிற்கு உதவுகிறது. உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க உதவும் பாலிபொன் மற்றும் ப்லவனைடு போன்ற அன்டி ஆக்சிடேன்ட்கள் இதில் உள்ளது. ஆகவே உங்கள் எடை குறைவதோடு நீங்கள் இளமையாகவும் தோற்றம் அளிப்பீர்கள். எடை இழப்புக்கு உதவுகின்ற கொழுப்பு அளவை கட்டுப்படுத்துவதில் இந்த தானியத்தில் உள்ள ஆற்றல்மிக்க மற்றும் டையூரிடிக் பண்புகள் உதவுகின்றன. கொள்ளில் உள்ள பீனால் உள்ளடக்கம் கொழுப்பு திசுக்களைத் தாக்க உதவுகிறது.

Advertisement
Advertisement
பசியின்மை மற்றும் ஆற்றல்

கொள்ளு சக்தி வாய்ந்த ஒரு தானியம். இது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. வயிறு நிரம்பும் உணர்வைத் தருகிறது. இதனால் அதிகம் சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. வயிறு நிரம்பிய உணர்வை பெறுவதோடு அல்லாமல் கொள்ளில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து எடை குறைப்பின் போது உங்களுக்கு தேவையான ஆற்றலை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. உடற்பயிற்சி மூலம் உங்கள் கலோரிகள் எரிக்கப்படும்போதும், கொழுப்பு உணவை நீங்கள் குறைக்கும் போதும், ஏற்படும் எடை இழப்பினால் உண்டாகும் ஆற்றல் இழப்பை, ஈடுகட்ட கொள்ளு உதவுகிறது.

பக்க விளைவுகள் இல்லாதது

கொள்ளு எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு தானியம். ஆனால் இயற்கையாக சூடு அதிகம் உள்ள ஒரு உணவுப் பொருள் என்பதால் இதனை எடுத்துக் கொள்ளும்போது அதன் அளவை கவனிக்க வேண்டும். குளிர்ந்த வெப்ப நிலையிலும், மழைக் காலத்திலும் இந்த உணவு உங்கள் உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும். ஆகவே குளிர் காலத்தில் இதனை ஒரு சூப்பாக செய்து பருகலாம்.

மற்ற நன்மைகள்

எடை குறைப்பைத் தவிர வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கொள்ளு பயன்பாட்டில் உண்டு. இதனை வேக வைக்காமல் பச்சையாக உண்ணுவதால் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. ஆகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் எடை குறைப்போடு சேர்த்து நீரிழிவு நோயும் கட்டுப்படுகிறது. கொள்ளு பயன்படுத்துவதால் குடலில் ஒட்டுண்ணிகளை அகற்ற முடிகிறது. இது செரிமான மண்டலத்தில் உண்டாகும் மற்றொரு நன்மையாகும். சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு கொள்ளு நல்ல பலனைத் தருகிறது. கொள்ளு இனப்பெருக்க அமைப்பில் அதன் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது, மேலும் குறைந்த விந்து எண்ணிக்கை கொண்ட ஆண்களுக்கு மற்றும் குறைவான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு உதவுகிறது.

கொள்ளு பயன்படுத்தி சில உணவு வகைகள்

ஆசியா, ஆப்ரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் பெருமளவில் பயிர் செய்யப்படுவதால் ஐரோப்பியர்களுக்கு இதனை உண்ணும் பழக்கம் இல்லை. கொள்ளை அப்படியே சாப்பிடாமல் முளைக்க வைத்து பயன்படுத்துவர் ஐரோப்பியர்கள். இதனால் அதன் சுவை மற்றும் நன்மைகள் அப்படியே கிடைக்கிறது. கொள்ளு சூப் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு உணவு வகையாகும். சீரகம், கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு மற்றும் புளியுடன் கொள்ளை சேர்த்து தயாரிக்கப்படும் சூப் ஒரு நல்ல சுவையைத் தரும். வயிறு தொடர்பான கோளாறுகளைப் போக்கவும் கொள்ளை பயன்படுத்தலாம்.

Have a great day!
Read more...

English Summary

Even when we all know about most of the legumes, horse gram is often forgotten.