For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்களூர் பன் ரெசிபி

By Maha
|

மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், கர்நாடகத்தில் உள்ள மங்களூரில் மிகவும் பிரபலமான மங்களூர் பன் என்று அழைக்கப்படும் வாழைப்பழ பூரியை செய்து சாப்பிடுங்கள்.

இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mangalore Buns Or Banana Puri

தேவையான பொருட்கள்:

மசித்த வாழைப்பழம் - 1/2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
மைதா - 2 கப்
எள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பூரி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடாவதற்குள், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதனை தேய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

English summary

Mangalore Buns Or Banana Puri

Mangalore Buns or Banana Puri's are not only simple and easy to make at home, but also the ingredients used in this recipe can be easily sourced in any part of the world. Here is the recipe. Check out...
Story first published: Tuesday, May 6, 2014, 17:10 [IST]
Desktop Bottom Promotion