For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு சுத்தமா இருக்க சொல்லிக் கொடுங்க...

By Maha
|

குழந்தைகள் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாகத் தான் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் இருப்பதால் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. அந்த அட்டகாசத்தின் போது வீடு மிகவும் மோசமானதாக இருக்கும். எவ்வளவு தான் வீட்டை சுத்தம் செய்தாலும், குழந்தைகள் இருக்கும் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அட்டகாசம் செய்யும் அவர்களுக்கு தங்கள் வீட்டை அசுத்தப்படுத்துவது ஒரு தவறு புரியாது. ஆகவே அவர்களுக்கு பெற்றோர்கள் தான் சுத்தத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு உதாரணமாக கோபம் வந்தால் பொருளை கண்ட இடத்தில் தூக்கிப் போடுதல், படிக்கும் போது பென்சில் சீவுவதை அப்படியே போடுதல், பேப்பரை கிழித்து போடுதல் போன்றவை. அதிலும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, மிகவும் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

Tips To Raise Tidy & Clean Kids
* முதலில் அவர்களுக்கு சுத்தத்தின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, ஒரு விளையாட்டோடு சொல்லிக் கொடுத்தால், அவர்கள் மனதில் அது நன்கு பதியும். மேலும் அந்த சுத்தத்தால் பல அந்நியாவசிய வேலைகளை தவிர்க்கலாம் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக, வீட்டு அலமாரியில் துணிகளை அழகாக மடித்து வைத்து, பயன்படுத்தினால், அவசரமாக வெளியே செல்லும் போது எதையும் தேட வேண்டிய அவசியமிருக்காது என்று சொல்ல வேண்டும். அதை விட அவர்களுக்கு அதை ஒரு முறை செய்து காண்பித்தால், அவர்கள் மனதில் விரைவில் பதியும்.

* முக்கியமாக அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோர் எவ்வாறு நடக்கின்றனரோ, அவ்வாறே பின்பற்றுவார்கள். ஆகவே அவர்கள் முன்பு நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது, அவர்களுக்கும் சுத்தம் செய்ய வேண்டும் என்று தோன்றும். மேலும் எப்போதும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் முறையில் சொல்லிக் கொடுத்தால், அவர்கள் நன்கு புரிந்து கொள்வர். குறிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இதனை அவர்களது அப்பாக்கள் சொல்லிக் கொடுத்தால் நல்லது.

* வீட்டை சுத்தம் செய்வதை பெற்றோர்களே சோம்பேறித்தனமாக நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைத்தால் குழந்தைகளுக்கும் அது சோம்பேறித்தனத்தை எற்படுத்திவிடும். பின் என்ன சொன்னாலும் அவர்கள் செய்யமாட்டார்கள். மேலும் எந்த வேலை செய்யும் போதும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுங்கள். அதனால் அறிவுக் கூர்மையடையும் என்பதையும் சொல்லுங்கள். முக்கியமாக வீட்டை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள். மேலும் நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் இருக்கும் போது, குழந்தைகளையும் அழைத்து, தங்களுடன் வீட்டை சுத்தம் செய்யும் வேலையை செய்யச் சொல்லுங்கள்.

வேண்டுமென்றால், குழந்தைகளிடம் அவ்வப்போது கிப்ட் கொடுத்து ஊக்குவிக்கலாம். இது குழந்தைகளுக்கு ஒருவித உற்சாகத்தைத் தருவதோடு, அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும்.

English summary

Tips To Raise Tidy & Clean Kids | குழந்தைகளுக்கு சுத்தமா இருக்க சொல்லிக் கொடுங்க...

Parents need to make sure that the kids learn to stay tidy and clean. You have to make them know that cleanliness is a part of a good lifestyle. Here are few smart tips to make your kids learn how to stay tidy and clean.
Story first published: Monday, September 3, 2012, 17:54 [IST]
Desktop Bottom Promotion