Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் கள்ள உறவில் ஈடுபடுவது ஏன் சாதாரணமாகி வருகிறது? ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவுகள் என்ன தெரியுமா?
கள்ள உறவு அல்லது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தவறான உறவுகளாக பார்க்கப்படுகின்றன. இது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் சீர்கேடாகவும், நேர்மறையற்ற உறவாகவும் மற்றும் விபச்சாரத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றன. காலங்கலமாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதையே நம் இந்திய கலாச்சாரம் கூறிவருகிறது.
மாறிவரும் நவீன காலத்திற்கு ஏற்ப அதிகமான இந்தியர்கள் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை ஏற்றுக்கொள்வதால் விஷயங்கள் மாறி வருவதாகத் தெரிகிறது. இந்தியாவில் திருமணத்திற்குப் புறம்பான டேட்டிங் என்று வரும்போது, திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களால் நீங்கள் பெறப் போகும் பாதிப்புகளைப் பற்றி யோசித்து பார்ப்பதும் மிக முக்கியம்.

சமீபகாலமாக, இந்தியாவில் திருமணம் என்பது வாழும் காலம் முழுவதும் ஒன்றாக இணைந்திருக்கும் உறுதியான உறவாக பார்க்கப்படுவதில்லை. தம்பதிகளுக்குள் விஷயங்கள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தாலோ விவாகரத்து செய்வது சாதாரணமாக மாறிவருகிறது.
தங்கள் துணைக்கு துரோகம் செய்து மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் தம்பதிகள் பெரும்பாலானோர் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அவை என்ன கணக்கெடுப்பு? ஆய்வின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவில் திருமணம், விபச்சாரம் மற்றும் பிற வழக்கமான சமூக-கலாச்சார நெறிமுறைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களால் உருவாக்கப்பட்ட விவேகமான டேட்டிங் செயலியான Gleeden, IPSOS ஆகியவற்றின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
12 அடுக்கு சூழ்நிலைகளில் வசிக்கும் மக்களில், 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் வசிக்கும் 25 முதல் 50 வயதுக்குட்பட்ட 1,503 திருமணமான இந்தியர்களிடம் இந்த ஆய்வு கணக்கெடுக்கப்பட்டது. கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 82% பேர் ஒருவருடன் வாழ்நாள் முழுவதும் வாழலாம் எனவும், அவர்களுக்கு நேர்மையாகவும் உண்மையாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
44% பேர் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பது சாத்தியம் என்று கூறினார்கள். பதிலளித்தவர்களில் 55% பேர் தங்கள் மனைவியைத் தவிர வேறு ஒருவருடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் என்று தெரிவித்திருந்தனர். மேலும் 37% நபர்கள் யாரையாவது காதலிக்கும் போது அவரை ஏமாற்றுவது சாத்தியம் என்று நம்புகிறார்கள் என்ற தகவல்கள் இந்த ஆய்வில் வெளிவந்தது.
கவனம் முக்கியம்
நட்பாக இணக்கமாக இருப்பது, உணர்ச்சி ஆதரவு மற்றும் உடல் நெருக்கம் ஆகியவை ஒருவரின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு அடிப்படையாகும். எனவே, ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணரும்போது அல்லது தனது கூட்டாளியின் கவனத்தை இழக்கும் போது, அவர்கள் வேறொருவரால் ஈர்க்கப்படலாம்.
அது நம்பமுடியாத அளவிற்கு உறவில் பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் இதை சமாளிப்பது மிக கடினம். கணக்கெடுப்பின்படி 33% நபர்கள் தங்கள் உறவில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.
பழிக்கு பழி வாங்கும் எண்ணம்
உங்கள் பங்குதாரர் உங்களுக்கு துரோகம் செய்யும்போது, நீங்களும் அவர்களுக்கு துரோகம் செய்ய நினைப்பது இயற்கையானது. மேலும் பழிவாங்குவது என்பது மனிதர்களிடையே இருக்கும் ஒரு உணர்வு. கணக்கெடுப்பின்படி, 23% தனிநபர்கள் தங்கள் துணையை பழிக்கு பழி வாங்குவதற்காக வேறொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவதாக நம்புகிறார்கள்.
தேவைகள் இல்லாமை
கணக்கெடுப்பின்படி, 32% நபர்கள் தங்கள் துணையிடமிருந்து பாலியல் திருப்தியின் பற்றாக்குறையைக் கையாளுகிறார்கள். மேலும் இந்த சூழ்நிலை துரோகத்திற்கு வழிவகுக்கிறது. உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தொடர்பு இல்லாதது உறவில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
புதிய காதல் தீப்பொறிகள்
திருமணத்திற்கு புறம்பாக டேட்டிங்கில் ஈடுபடுவது, ஒரு தந்திரமான விவகாரமாக இருக்கலாம். இது பெரும்பாலும் உணர்ச்சி மற்றும் நடைமுறை இரண்டிலும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் சில சமயங்களில், உங்கள் உறவுக்கு வெளியே ஒருவரைத் தேடும்போது, உங்களுக்குள் புதிதாக காதல் எழுவதை உணருகிறீர்கள். கணக்கெடுப்பின்படி, 32% நபர்கள் புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, மீண்டும் தங்கள் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உணர ஆர்வமாக உள்ளனர்.
இன்னும் சிறப்பானவராக உணருவது
திருமண உறவுக்கு புறம்பாக டேட்டிங்கில் ஈடுபடுவது என்று வரும்போது, பலர் அது உடல் தேவைகளை பூர்த்தி செய்வதாக மட்டுமே கருதுகின்றனர். இருப்பினும், அதை விட அதிகமான விஷயங்களின் தேவைகள் இருக்கலாம். நீங்கள் இன்னும் கவர்ச்சியாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்க முடியும் என்பதை நீங்களே நிரூபிப்பது சிலருக்கு பெரும் ஈர்ப்பாக இருக்கும்.
கணக்கெடுப்பின்படி, 31% நபர்கள் வயது அல்லது உறவு நிலையைப் பொருட்படுத்தாமல், இன்னும் கவர்ச்சியாகவும் விரும்பத்தக்கதாகவும் உணர விரும்புகிறார்கள். சிலருக்கு, திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடுவது சுயமரியாதைக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும் என்கிறார்கள்.



Click it and Unblock the Notifications


