Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ஆண்களே! முதல் முறையா உடலுறவில் ஈடுபடுறீங்களா? அப்ப 'இத' உங்க மனைவிக்கு பண்ண மறந்துடாதீங்க!
முதல்முறையாக உடலுறவில் ஈடுபடும்போது ஆண், பெண் இருவருக்கும் ஒருசில தயக்கம் மற்றும் கூச்சம் இருக்கும். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் தாம்பத்திய சுகம் என்பது முக்கியமானது. பெரும்பலான உறவுகளில் தாம்பத்திய வாழ்க்கை சரியாக அமையாததால், அந்த உறவில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இது தாம்பத்திய சுகத்தை தாண்டி, உங்கள் உறவை வலுவாகவும் இன்னும் நெருக்கமாகவும் மாற்ற உதவும். ஆதலால், உங்கள் பாலியல் வாழ்க்கையை இன்பமாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற பல்வேறு விஷயங்களை முயற்சி செய்யுங்கள். முதல் முறையாக உடலுறவு கொள்வது பற்றிய பல்வேறு கட்டுக்கதைகள் இங்கு உலாவி வருகின்றன.

ஆதலால், அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், விஷயங்களை உங்களுக்கு பிடித்ததுபோல மேற்கொள்ளுங்கள். முதல் சந்திப்பிலேயே பெரிய எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டாம். நன்றாக செயல்பட வேண்டும் உச்சக்கட்டம் அடைய வேண்டும் என்ற அழுத்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், இது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.
விஷயங்களை அதன்போக்கிலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும் தொடங்க வேண்டும். ஆண்களே! முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது, நீங்கள் உங்கள் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பொறுமையாய் இருங்கள்
முதல் முறையாக உடலுறவு கொள்ளும்போது, சில பெண்கள் பாலியல் ரீதியாக தூண்டப்பட்டாலும், வலியை அனுபவிக்கலாம். பயம், பதட்டம் மற்றும் அசெளகரியம் காரணமாக சில பெண்கள் வலியை பெறலாம். அதனால், நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு அவளை வசதியாக உணர வைக்க வேண்டும்.
செயல்பாடுகளில் வேகமாக முன்னேறாமல் பொறுமையாக செயல்படுங்கள். மேலும், நீங்கள் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த பிறகு, உடனே நீங்கள் இரண்டாவது சுற்றுக்கு விரைந்து செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இருவரும் வசதியாகவும் விருப்பம் இருந்தால் மீண்டும் இணைய வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு அனுமதி வழங்கும் வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்துங்கள்
வலியற்ற மற்றும் மகிழ்ச்சியான உடலுறவுக்கு லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பெண்கள் இயற்கையாகவே லூப்ரிகேஷனை உற்பத்தி செய்யும் அதே வேளையில், நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொண்டால், கூடுதல் மசகு எண்ணெயை கையில் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஊடுருவல் கடினமாக இருக்கும்போது, வலியை உணரலாம்.
உங்கள் பெண் உடலுறவை விரும்பினாலும், அனுபவித்தாலும் பல காரணிகளால் அவள் வறட்சியை அனுபவிக்க நேரிடலாம். மேலும் உயவு உங்கள் இருவருக்கும் விஷயங்களை எளிதாக்க உதவும். இதனால், வலி இல்லாத நீண்ட நேர உடலுறவை நீங்கள் பெறலாம்.
மென்மையாக இருங்கள்
உடலுறவு என்பது 5 அல்லது 10 நிமிடங்களில் செய்துவிட்டு போகும் செயல் அல்ல. அது ஓர் கலை. மெதுவாகத் தொடங்கி, நேரம் செல்லச் செல்ல வேகத்தை அதிகரிக்க வேண்டும். உங்கள் மனைவி அல்லது காதலி அதை எப்படி விரும்புகிறாள் என்பதை அவள் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறாள். ஒரு தரப்பினர் மட்டும் எப்படி நடக்கிறார்கள் என்பதை விரும்பும்போது செக்ஸ் அனுபவிக்க முடியாது.
தம்பதிகள் இருவரும் சேர்ந்து விஷயங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒருவரின் விருப்பங்களை இன்னொருவர் நிறைவேற்ற் வேண்டும். இது உங்கள் இருவரையும் எளிதாக உச்சக்கட்டம் அடையச் செய்யும்.
அவளுடைய எதிர்வினையை கவனத்தில் கொள்ளுங்கள்
உடலுறவின் போது, உங்கள் பெண்ணின் எதிர்வினைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவள் வலி அல்லது அசௌகரியத்தில் இருப்பதாகத் தோன்றினால், உடனடியாக நிறுத்தி, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேளுங்கள்.
அவளுடைய உணர்வுகளுக்கும், நல்வாழ்வுக்கும் முன்னுரிமை அளிப்பதும் மிக முக்கியம். உடலுறவு கொள்ளும் நேரம் முழுவதும் அவள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிசெய்வது அவசியம்.
உடலுறவுக்கு பின்
உடலுறவு கொண்டு முடித்த பின், வேலை முடிந்தது என உறங்க செல்ல வேண்டாம். உடலுறவுக்கு பின் ஓர் நீண்ட அணைப்பு, முத்தம் அல்லது ஆதரவான பேச்சு மிக முக்கியம். இது பெரும்பாலும் எல்லா பெண்களும் எதிர்பார்ப்பது. ஆதலால், உங்கள் பெண்ணுக்கு பாலியல் செயல்பாடுகளுக்குப் பிறகு, உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் உறுதியையும் வழங்குங்கள்.
அவளுடைய அனுபவத்தைப் பற்றி அவளிடம் பேசுங்கள், இதன் மூலம் அவள் மதிப்புமிக்கதாக உணருவாள். அவளுக்கு ஏதேனும் கவலைகள் அல்லது உணர்ச்சிகரமான எதிர்வினைகள் இருந்தால், ஆறுதலையும் புரிதலையும் வழங்க தயாராக இருங்கள். வெளிப்படையான தன்மையுடன் இருவரும் நடந்து கொள்ளும்போது, அது உங்கள் உடலுறவை மட்டுமல்லாது உறவையும் நன்றாக பலப்படுத்தும்.



Click it and Unblock the Notifications

