Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
உங்க கணவன் அல்லது மனைவி கள்ள தொடர்புல இருப்பது தெரிஞ்சத்துக்கு அப்புறம்... 'இத' நீங்க செய்யவே கூடாதாம்!
பொதுவாக திருமணமான தம்பதிகளுக்குள் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம். சில உறவுகளில் அவை கடுமையான சிக்கல்களை கூட உருவாக்கலாம். ஆம், சில தம்பதிகள் தங்கள் துணையை ஏமாற்ற துணிகிறார்கள். திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் பலர் ஈடுபடுகிறார்கள், இதற்கு பல்வேறு காரணங்களையும் அவர்கள் கூறுகிறார்கள்.
உறவுகளைப் பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மற்ற நபரின் செயல்களைப் பற்றி நீங்கள் ஒருபோதும் 100% உறுதியாக இருக்க முடியாது, உங்களைப் பற்றியும் உங்கள் செயல்கள் பற்றியும் மட்டுமே நீங்கள் உறுதியாக இருக்க முடியும். ஏனெனில், உங்களின் துணை உங்களுக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பார் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

பல தம்பதிகள் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருக்கின்றனர். அவர்கள் உங்களிடம் ஒப்புக்கொண்டாலும் அல்லது உங்கள் பங்குதாரர் உங்களை ஏமாற்றிவிட்டதாக நீங்கள் கண்டறிந்தாலும், அவர்களை விட்டு விலகுவது முதல் சண்டையிடுவது வரை நீங்கள் நிறைய உணர்ச்சிகளை உணருவீர்கள் மற்றும் அதை கையாள வேண்டியிருக்கும்.
ஆனால், உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
உங்கள் கணவன் அல்லது மனைவி கள்ளதொடர்பில் இருந்ததை அறிந்தவுடன் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். நிச்சயமாக இந்த விஷயம் உங்களை கோபமடையச் செய்யலாம், உணர்ச்சி ரீதியாக உங்கள் பொறுமையை உடைக்கலாம். அதற்காக, நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களையோ, தொலைக்காட்சி, கார் அல்லது பர்னிச்சர்களை உடைத்து, நிலைகுலைந்து செயல்படத் தொடங்காதீர்கள்.
நீங்கள் அவர்களின் மேல் வைத்த நம்பிக்கை மற்றும் மரியாதையை இழக்கிறீர்கள். ஆனால் உங்களின் சுயமரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அந்த சூழலில் நீங்க வன்முறையை கையாளும் நபராக இருக்காதீர்கள். ஏனெனில், இது உங்கள் துணையின் தவறை குறைத்துக்காட்டக்கூடும்.
ஏன் அப்படி செய்தார்கள் என்று கேளுங்கள்?
உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, அவர்கள் ஏன் உங்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்று கேளுங்கள். அவர்கள் ஏன் உங்களை ஏமாற்றினார்கள் என்பதை பற்றி நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியதில்லை. அவர்கள் வாழ்க்கையில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார்கள், அதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உறவு தொடர்பான பிரச்சினை என்றால், உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களிடம் வந்து, பேசி அதை தீர்த்து இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் உங்களை ஏமாற்றத் துணிந்து இருக்கிறார்கள். இது உங்களுக்கு உறவில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.
துணையை விட்டுவிடுமாறு கேட்க வேண்டாம்
உங்கள் கணவன் அல்லது மனைவி யாருடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது, அவர்களைப் பின்தொடர்வது அல்லது சண்டையிடுவது மோசமானது. அவர்களை நேரில் சந்தித்து உங்கள் துணையை விட்டு வெளியேறச் சொல்வது அல்லது உங்கள் திருமண வாழ்க்கைக்குள் வர வேண்டாம் என்று அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டாம்.
உங்கள் துணை உங்களை விட்டுவிட்டு அவர்களை தேர்வு செய்ய முடிவு செய்தார். ஆதலால், உங்கள் துணையுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு உங்கள் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. உங்களுக்கு துரோகம் செய்த உங்கள் கணவன் அல்லது மனைவியை எதிர்கொள்ளுங்கள்.
அழுது கெஞ்சுவது
உங்கள் துணை செய்த துரோகத்தை பற்றி அறியும்போது, அவர்களிடம் என்னை விட்டு போக வேண்டாம் என்று நீங்கள் அழுது கெஞ்சலாம். ஒருபோதும் இதை செய்யாதீர்கள். இது அவர்களின் பார்வையில் உங்களை குறைவான மதிப்புடையவர்களாக தோற்றமளிக்க வைக்கிறது. தனிப்பட்ட முறையில் அல்லது உங்கள் நண்பர்களுடன் அழுவது பரவாயில்லை.
ஆனால், தயவு செய்து அவர்களுக்கு முன்னாள் அழுது கெஞ்ச வேண்டாம் அல்லது நீண்ட குறுஞ்செய்திகள் மூலமாகவோ கெஞ்ச வேண்டாம். அவர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவை விருப்பப்பட்டுதான் தேர்ந்தெடுத்தனர்.
குறிப்பாக, உங்கள் துணை உங்களிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கேட்டால். உங்கள் பிரிவை ஏற்றுக்கொண்டு முன்னேறுங்கள். காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என்று உங்கள் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தை நோக்கி நகருங்கள்.
உங்கள் துணையை ஏமாற்ற நினைப்பது
உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களை ஏமாற்றினார் என்பதற்காக, அவர்களை நீங்கள் ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறானது. அதற்கு எந்த அவசியமும் இல்லை. திறந்த உறவுகள் அரிதாகவே செயல்படும். நீங்கள் அவர்களை மன்னிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் அவரை அல்லது அவளை மன்னிக்க விரும்பவில்லை என்றால், அவர்களை அப்படியே விடுங்கள்.



Click it and Unblock the Notifications












