Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்!
மிசோஃபோனியா என்றால் என்ன? அது உங்கள் உறவை எப்படி அழிக்கும்?
Misophonia: மிசோஃபோனியா என்பது ஒலியின் வெறுப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட சில சத்தம் கேட்டாலே எரிச்சல் அடைய ஆரம்பித்து விடுவார்கள். சாதாரண சத்தங்கள் கூட இவர்களுக்கு எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
யாராவது ஒருவர் சாப்பிடும் போது ஏற்படும் சத்தம், தட்டும் போது ஏற்படும் சத்தம் போன்றவை இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். இந்த சத்தத்தின் மீதான சகிப்புத்தன்மை இவர்களுக்கு குறைய ஆரம்பிக்கும். இதனால் சில ஓசைகளை கேட்கும் போது கோபப்பட ஆரம்பிப்பார்கள். பதற்றமாக உணருவார்கள். சரி வாங்க இந்த மிசோஃபோனியா பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

மிசோஃபோனியா என்றால் என்ன?
சில ஒலிகள் தீவிர உணர்ச்சிகரமான எதிர்வினையை தூண்டக கூடியது. உதாரணமாக சாப்பாடு மெல்லும் போது ஏற்படும் சத்தம், பேனாவை க்ளிக் செய்யும் சத்தம் போன்ற சத்தங்கள் அடங்கும். இதனால் அவர்கள் கோபத்திற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
மிசோஃபோனியாவால் உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள்:
மிசோஃபோனியாவால் உறவுகளில் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இதனால் மன அழுத்தம் மற்றும் மோதல்கள் உண்டாகும். எனவே மிசோஃபோனியா பற்றி புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் ஆரோக்கியமான உறவை நீங்கள் பேண முடியும். மிசோஃபோனியா உங்கள் உறவை சீர்குலைக்காமல் எப்படி வழிநடத்தலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
அதிகரித்த எரிச்சல் மற்றும் கோபம்
மிசோஃபோனியா உள்ள ஒருவருக்கு தூண்டுதல் ஒலி ஒரு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தும். உங்கள் துணை தற்செயலாக அந்த சத்தத்தை ஏற்படுத்தினால் கூட அதை தாங்க முடியாமல் நீங்கள் எரிச்சல் அடையலாம். எனவே இதனால் அடிக்கடி வாதங்கள் மற்றும் மனக்கசப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது.
சமூக விலகல்
மிசோஃபோனியா உள்ளவர்கள் சமூக நடவடிக்கைகள் மற்றும் குடும்பங்களில் இருந்து விலகி இருப்பார்கள். இதனால் உங்கள் துணை தனிமைப்படுத்துதலை சந்திக்க நேரிடலாம். இதனால் உங்கள் உறவில் இக்கட்டான சூழ்நிலை உண்டாக வாய்ப்புள்ளது.
தகவல் தொடர்பு துண்டிப்பு
மிசோஃபோனியா ஒரு உறவுக்குள் தவறான புரிதலையும், தொடர்பு முறிவுக்கும் வழி வகுக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் துணை உங்களை புரிந்து கொள்ள தகவல் தொடர்பு அவசியம். உங்கள் உணர்வுகளை அவர்களுக்கு புரிய வைக்க முயலுங்கள்.
சமரசமான நெருக்கம்
மிசோஃபோனியாவால் ஏற்படும் பதற்றம் மற்றும் மன அழுத்தம் உங்கள் நெருக்கத்தை பாதிக்கலாம். நீங்கள் எரிச்சலின் விளிம்பில் இருப்பதால் உங்கள் துணை நிராகரிக்கப்பட்டதாகவோ அல்லது விரும்பப்படாதவர்களாகவோ உணரலாம்.
மன அழுத்தம்
தூண்டுதல் ஒலிகளால் ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தம் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே இந்த மிசோஃபோனியா பிரச்சினைக்கு தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.
மிசோஃபோனியாவை சமாளிக்க வழிகள்:
இருவரும் கற்றுக் கொள்ளுங்கள்
மிசோஃபோனியா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன என நீங்களும் உங்கள் துணையும் அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நோயின் புரிதலை அறிந்து கொள்ள முடியும். கல்வி எப்பொழுதும் இருவருக்குமான புரிந்துணர்வை வழங்குகிறது. மிசோஃபோனியாவை பற்றி புரிந்து கொள்வது உங்கள் துணை எதிர்வினையாற்றினால் கூட அதை சமாளிக்க முடியும்.
வெளிப்படையாக பேசுங்கள்
உணர்வுகள் மற்றும் தூண்டுதல்கள் உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை வெளிப்படையாக பேசுங்கள். திறந்த உரையாடல் உறவில் மனக்கசப்பு ஏற்படுவதை தடுக்கும். இதன் மூலம் நீங்கள் இருவரும் இணைந்து அதற்கான தீர்வுகளை கண்டறியலாம்.
ஒலி பாதுகாப்பான இடத்தை உருவாக்குங்கள்
மிசோஃபோனியா உள்ளவர்கள் தூண்டுதல்களை தவிர்க்க ஒலி பாதுகாப்பான இடத்தை உருவாக்கலாம். இது அவர்களுக்கு ஒரு நிவாரண உணர்வை கொடுக்கும். தூண்டுதல்கள் அல்லது சத்தங்கள் ஏற்படும் போது அமைதியான இடத்திற்கு சென்று கொள்ளலாம்.
ஹெட் ஃபோன்களை பயன்படுத்துதல்
உங்களுக்கு தூண்டுதல்கள் அதிகமானால் இரைச்சலை ரத்து செய்ய ஹெட் ஃபோன்களை பயன்படுத்தலாம். உணவு மற்றும் சமூக கூட்டங்களில் இது போன்று இருக்கலாம். இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். குடும்ப நிகழ்வுகள் மற்றும் பொது இடங்களில் ஹெட் ஃபோன்களை பயன்படுத்தலாம்.
சமாளிக்கும் திறன்
மிசோஃபோனியா நபர்கள் தூண்டுதல்களை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நினைவாற்றல் அல்லது அமைதியான நேரங்களை அமைப்பது போன்றவற்றை செய்யலாம். இதன் மூலம் உங்கள் உறவில் பிணைப்பையும் பரஸ்பர புரிதலையும் வளர்க்க முடியும்.
மருத்துவரை நாடுங்கள்
உங்களுக்கு இதற்கு சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவரின் உதவியை நாடலாம். இதன் மூலம் இருவரும் ஆதரவை பெற முடியும். ஒலி தொடர்பான மன அழுத்தத்தை போக்க மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
சூழலை சரி செய்ய முயலலாம்
வீட்டில் தூண்டும் ஒலிகளின் குறைப்பாட்டை தடுக்க சில மாற்றங்களை செய்யலாம். மென்மையான மூடும் அலமாரிகள், நடக்கும் போது சத்தம் ஏற்படுவதை தடுக்க தரை விரிப்புகள், தனித்தனி உணவு நேரங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை செய்யலாம். இப்படி தினசரி தூண்டுதல்களை குறைத்து உங்கள் மன அழுத்தத்தை குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications
