Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
வாழ்க்கை முழுக்க உங்க கணவன் அல்லது மனைவி கூட சந்தோஷமா வாழ... 'இந்த' 5 விஷயத்தை கண்டிப்பா பண்ணணுமாம்!
மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை கொண்டிருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். தம்பதிகள் இருவரும் உறவில் நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு சில விஷயங்கள் மிக அவசியம். அவற்றில் முக்கியமானது அவர்களுக்குள் எல்லைகளை அமைப்பது.
கணவன் மற்றும் மனைவிக்குள் எந்த எல்லைகளும் இல்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால், எல்லைகளை அமைப்பது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும் என்பது தெரியுமா? ஆம், உங்கள் உறவை ஒரு அழகான நடனம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கூட்டாளியும் தாளத்திற்கும் ஓட்டத்திற்கும் ஏற்ப நடன மாட வேண்டும்.

திறமையான நடனக் கலைஞர்கள் தடையின்றி தொடர்புகொள்வது போல, உங்கள் இல்லற வாழ்க்கையை மரியாதைக்குரிய எல்லைகள் மூலம் இணைக்க வேண்டும். எல்லைகளை கண்ணுக்குத் தெரியாத வேலிகளாகக் கற்பனை செய்து, உங்கள் காதலைப் பாதுகாத்து, அதை செழிக்க வைக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ இணைந்து செயல்பட வேண்டும்.
நீங்கள் புதுமணத் தம்பதிகளாக இருந்தாலும் அல்லது பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தாலும் பரவாயில்லை, உங்கள் மனைவியுடன் ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது முக்கியம். ஒருவருக்கொருவர் உங்கள் அன்பைப் பெருக்கிக் கொள்ள உதவும் வகையில், உங்கள் மனைவியுடன் ஆரோக்கியமான எல்லையை உருவாக்க உங்களுக்கு வழிகாட்டும் சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஆரோக்கியமான தகவல் தொடர்பு
உறவில் கணவன் மற்றும் மனைவிக்குள் ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பதற்கு திறந்த மற்றும் நேர்மையான உரையாடல்கள் மிக அவசியம். உங்கள் தேவைகள், ஆசைகள் மற்றும் கவலைகள் பற்றி உங்கள் துணையிடம் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள், அதையே செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையை வளர்க்க உதவும். மேலும், இது உங்கள் இணைப்பை பலப்படுத்துகிறது. ஆரோக்கியமான தொடர்பு என்பது பேசுவது மட்டுமல்ல, உங்கள் துணை சொல்ல வருவதைத் திறந்த மனதுடன் கேட்பதும் ஆகும்.
உங்கள் தனிப்பட்ட இடத்தை வரையறுக்கவும்
நீங்கள் இருவரும் தம்பதிகள், இணைந்து வாழ வேண்டும் என்பது எல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் வேறு தனிப்பட்ட நபர்கள். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடத்தை வழங்கவும் மதிக்கவும் வேண்டும். இதன் பொருள் உங்கள் மனைவி தனக்காகவும், அவர்களின் பொழுதுபோக்குகளுக்காகவும் அல்லது சில அமைதியான தருணங்களுக்காகவும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருக்க சுதந்திரம் கொடுப்பதன் மூலம், நீங்கள் ஒற்றுமையை இன்னும் அதிகமாக பாராட்டுவீர்கள். இது உறவுக்குள் நெருக்கத்தை வளர்த்து, மகிழ்ச்சியான அன்பான உறவாக மாற்றும். உங்கள் துணையின் தனிப்பட்ட எல்லைக்குள் எப்போதும் நுழையக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
தரமான நேரத்திற்கு நேர மேலாண்மை
பெரும்பலான தம்பதிகளுக்குள் சண்டை வருவதற்கு பொறுப்பு மற்றும் வேலைகளை சமமாக பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் காரணம். அலுவலக வேலை, வீட்டு வேலைகள் மற்றும் பிற பொறுப்புகளை சமநிலைப்படுத்தாமல் இருப்பது சில சமயங்களில் உங்கள் உறவை பின்னோக்கி தள்ளும். இது விவாதம், சண்டை மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும்.
ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவிட உண்மையாக முயற்சி செய்யுங்கள். இரவு நேர டேட்டிங் உருவாக்குங்கள், சாகசங்களைச் செய்யுங்கள் அல்லது வீட்டில் இரவு நேரத்தில் திரைப்படம் ஒன்றாக பார்க்கலாம். இவ்வாறு உங்கள் துணையுடன் தரமாக நேரம் செலவிடும்போது, உங்கள் இணைப்பை வளர்த்து, தீப்பொறியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகளைப் பற்றி தெளிவாக இருங்கள்
உறவில் எல்லைகளை அமைப்பது என்பது உங்கள் உறவுக்கு ஒரு வரைபடத்தை உருவாக்குவது போன்றது. உங்கள் எதிர்பார்ப்புகளை உங்கள் துணையிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். எது ஏற்கத்தக்கது மற்றும் எது இல்லாதது என்பதைப் பற்றி விவாதிக்கவும். நிதி விஷயங்களில் இருந்து வீட்டு வேலைகளைப் பிரிப்பது வரை, பரஸ்பர எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டும்.
இது தவறான புரிதல்கள் மற்றும் மோதல்களைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குகிறது. உங்கள் எல்லைகள் யதார்த்தமானவை மற்றும் இருவருக்கும் நியாயமானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இல்லை என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
இது எப்போதும் எளிதானது அல்ல, ஆனால் சில நேரங்களில் உங்கள் நல்வாழ்வையும் உங்கள் உறவின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க இல்லை அல்லது வேண்டாம் என்று சொல்ல வேண்டும். உங்கள் மனைவிக்காக உங்கள் சொந்த தேவைகளை அதிகமாக தியாகம் செய்யாதீர்கள். உங்களால் முடியாது என்றால், முடியாது என்று சொல்லிவிடுங்கள்.
வேண்டாம் என்று சொல்வதால், நீங்கள் அவர்களைக் குறைவாக நேசிக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. இது சுய பாதுகாப்பு மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும். நீங்கள் வேண்டாம் அல்லது இல்லை என்று சொல்வதன் மூலம், மீண்டும் உங்கள் கணவன் அல்லது மனைவி அதை பற்றி உங்களிடம் பேச மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications

