Latest Updates
-
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்! -
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
உடலுறவு கொள்ளாமல் நீங்க உங்க கணவன் அல்லது மனைவியோடு நெருக்கமா சந்தோஷமா இருக்க... இத பண்ணுங்க!
இன்றைய நாளில் பெரும்பலான தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நெருக்கம் என்பது ஒரு ஆழமான பாச உணர்வு. இது ஒரு நபருடனான இணைப்பு மற்றும் நெருக்கத்தை வரையறுக்கிறது.
நெருக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்கு உதவுகிறது. ஒன்று பாலியல் ஆசைக்கான தூண்டுதல் மற்றும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான உறவில் இருப்பதை குறிக்கிறது. ஒரு நபர் தனது குடும்பம் அல்லது நண்பர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க முடியும். ஆனால், தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கம் பெரும்பாலும் பாலியல் உறவை உள்ளடக்கியது.

உடலுறவோடு அல்லது உடலுறவு இல்லாமலோ உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது, உறவின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தினசரி மன அழுத்தத்தைத் தீர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இது பாலியல் உறவுகளில் அவர்களின் திருப்தியுடன், துணையின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.
இருப்பினும், உடலுறவுப் பகுதியைத் தவிர்த்தால், தம்பதிகள் உடலுறவு இல்லாமல் கூட ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க முடியும். இன்னும் ஆழமான தொடர்பை வளர்த்து, ஒருவருக்கொருவர் இருப்பதை அனுபவிக்க முடியும். உடலுறவு இல்லாமல் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்கும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பாராட்டுங்களை தெரிவியுங்கள்
பாராட்டுக்களை விரும்பாத நபர் யார் இருக்கிறார்கள்? அந்த வகையில், ஒவ்வொருவரும் ஒரு உண்மையான பாராட்டு தருணத்தை எதிர்பார்க்கிறார்கள். உங்கள் கூட்டாளரைப் பாராட்டுவது உங்கள் உறவில் நல்ல வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டாட உதவுகிறது. உங்கள் துணையைப் பற்றி நீங்கள் எதை அதிகம் மதிக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்கும்.
உங்கள் கூட்டாளரைக் கேட்பது
உங்கள் துணையின் பேச்சைக் கேட்பது அவர்களைக் கேட்பதை விட அதிகம். இது நல்ல நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாகும். ஏனெனில் அவை உங்கள் துணையை நன்கு அறிந்துகொள்ளவும், அவரை அல்லது அவளைப் பற்றிய நெருக்கமான புரிதலைப் பெறவும் உதவுகின்றன. இது அவர்கள் மீதான உங்கள் அன்பு, மரியாதை மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும்.
ஒருவருக்கொருவர் மரியாதைக்குரியவர்கள்
சில நேரங்களில், உங்கள் துணை தனக்கென நேரமும் தனிப்பட்ட இடமும் தேவை என யோசிக்கலாம். அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளிப்பது, நீங்கள் அவர்கள் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கான நேரத்தை மற்றும் தனிப்பட்ட இடத்தை அனுமதிப்பது, உங்கள் இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.
சர்ப்ரைஸ் கொடுப்பது
உங்கள் அன்பை வெளிப்படுத்த ஒரு நல்ல மற்றும் எதிர்பாராமல் சப்ரைஸ் செய்வது எப்போதும் பாராட்டப்படுகிறது. பூக்களை அனுப்புலாம் அல்லது உங்கள் துணைக்கு பிடித்த உணவை தயார் செய்து கொடுக்கலாம் அல்லது அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆச்சரியங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க உதவும். இது ஒரு நெருக்கமான உறவுக்கு முக்கியமானது.
நேர்மையாக இருப்பது
நம்பிக்கையின்மை மோதல்கள் மற்றும் பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும். உங்கள் உறவில் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம், உங்கள் துணையிடம் நீங்கள் மனம் திறந்து பேசி, அவர்களின் தேவைகள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு உறவில் நேர்மையாக இருப்பது என்பது, முக்கியமாக உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் விரும்பத்தகாததாக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும்.
சிரிக்கப் பழகுங்கள்
தம்பதிகள் ஒருவருக்கொருவர் பார்க்கும்போது, புன்னகை செய்யுங்கள். நீங்கள் வேண்டுமென்றே ஒருவரைப் பார்த்து சிரிக்கும்போது, இருவரின் மனநிலையையும் உற்சாகத்தையும் உயர்த்தும் நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும்.
ஒரு நபர் சிரிக்கும்போது, மூளை செரோடோனின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று ஆய்வுகள் கூட கூறுகின்றன.
கைகளை பிடித்து
கைகளைப் பிடிப்பது என்பது, உங்களுக்கு சற்று விகாரமாகத் தோன்றலாம். ஆனால் இது கூட்டாளர்களிடையே நெருக்கத்தை வளர்க்க உதவும். ஒரு ஆய்வின்படி, கைப்பிடித்தல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை கவலையின் அளவைக் குறைக்க பயனுள்ள உத்திகள். உங்கள் துணையுடன் இருப்பதில் நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது
காபி/டீ தயாரித்தல்
தேநீர் அல்லது காபி அல்லது உங்கள் துணையின் விருப்பமான பானத்தை தயாரிப்பது அவர்கள் மீது உங்கள் அன்பான சைகையைக் காட்டுகிறது. உடல் நெருக்கத்தைப் போலவே இது மதிப்புமிக்கது. இந்த சைகைகள் உறவை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமான உறவிற்கும் வழிவகுக்கும்.
ஒன்றாக ஒரு திரைப்படம் பார்ப்பது
வீட்டில் அல்லது தியேட்டரில் தம்பதிகள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை பார்ப்பது என்பது உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட சிறந்த யோசனையாக இருக்கும். இது இருவரும் யதார்த்தத்திலிருந்து தப்பித்து ஒன்றாக நேரத்தை செலவிட அனுமதிக்கிறது. திரைப்படம் பார்த்துவிட்டு, நேரடியாக உறங்குவதற்குப் பதிலாக, திரைப்படம் குறித்து சிறிது நேரம் விவாதிக்க மறக்காதீர்கள்.
மசாஜ்
மசாஜ் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது பல குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் மசாஜ் செய்வது அல்லது ஒருவரையொருவர் மசாஜ் செய்வது கூட்டாளர்களிடையே நெருக்கத்தையும் ஆழமான தொடர்பையும் ஊக்குவிக்கும். இது தோல் தொடர்பு, மசாஜ் குணப்படுத்தும் விளைவு மற்றும் துணையின் மீது கூடுதல் கவனம் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications

