Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
வைரலாகி வரும் விபரீதமான 'ஹஸ்பண்ட் டெஸ்ட்'... ஆண்கள் ரொம்ப பாவம்... என்ன டெஸ்ட் இது தெரியுமா?
சமீபத்தில் ஹஸ்பெண்ட் டெஸ்ட் என்னும் விஷயம் சமூகத் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களையும் உறவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் சோதிக்கின்றனர். 'ஹஸ்பண்ட் டெஸ்ட்' என்று அழைக்கப்படும், பல பயனர்கள் இப்போது சமூக ஊடகங்களில், தங்கள் கூட்டாளியின் பதிலைப் பதிவு செய்கிறார்கள். இந்த புதிய உறவுப் போக்கு என்ன, அது ஏன் 'கணவர் சோதனை' என்று அழைக்கப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வைரல் 'கணவர் சோதனை'
இந்த புதிய ட்ரெண்டிங்கின் படி, பெண்கள் ஒரு சாதாரண உரையாடலின் போது தங்கள் காதலனை 'கணவன்' என்று அழைத்ததையும், அவர்களின் துணை எவ்வாறு நடந்துகொண்டார் என்பதையும் சரியான தருணத்தில் பதிவு செய்கிறார்கள். காதலன் சிரித்தாலோ அல்லது நேர்மறையாக நடந்து கொண்டாலோ, அது அவர் உறவில் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் இருப்பதைக் காட்டுகிறது என்று பலர் நம்புகிறார்கள். அதேசமயம், அவர் தனது காதலியை மறுதலித்தாலோ அல்லது எதிர்மறையாக நடந்து கொண்டாலோ, அவர் அந்த உறவில் உறுதியாக இல்லை என்று அர்த்தம்.
பலர் தங்கள் காதலரைச் சோதிக்கும் இந்த முறையை தேர்ந்தெடுத்தாலும், அவர்களின் விசுவாசத்தை சோதிக்க ஒரே வழி அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், பலர் தங்கள் துணையை விசுவாசம் அல்லது அர்ப்பணிப்புக்காக சோதிக்கும் செயலைப் பற்றி தங்கள் கவலையை எழுப்பியுள்ளனர், ஏனெனில் இது ஆன்லைனில் பதிவிடுவதை விட தம்பதிகளிடையே விவாதிக்கப்பட வேண்டியது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த போக்கு குறித்தும், "கணவன்" என்று அழைக்கப்படுவதற்கு ஒரு ஆண் எப்படி நடந்துகொள்வார் என்பது குறித்தும் கருத்து தெரிவித்த உளவியல் நிபுணர்கள், "அவரிடம் நமக்குத் தெரியாத அல்லது புரிந்து கொள்ளாத விஷயங்கள் நிறைய இருக்கலாம், அவர் திருமணம் செய்து கொள்ளும் யோசனை இல்லாமல் இருக்கலாம் அல்லது எப்போதுமே கணவராக இருக்க விரும்பாமல் இருக்கலாம். எனவே இது அவரது தற்போதைய உறவில் அவரது அர்ப்பணிப்பை விட அவரின் குணங்களைப் பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்தும்" என்று கூறியுள்ளார்கள்.
'ஹஸ்பண்ட் டெஸ்ட்' ட்ரெண்ட் எப்படி ஆரம்பித்தது?
கென்சி கிரீன் தனது வீடியோவை ஆன்லைனில் பதிவிட்டபோது 'ஹஸ்பண்ட் டெஸ்ட்' ட்ரெண்ட் தொடங்கியது, அதில் அவர் தனது காதலனை வேண்டுமென்றே அவரது கணவர் என்று அழைத்தார். ஆனால் இந்த சோதனை அவரது காதலரிடம் எதிர்மறையான விளைவுகளேயே ஏற்படுத்தியது, அவர் எதிர்மறையாக பதிலளித்தார், "நான் உன் கணவர் அல்ல" என்று கூறினார். உடனடியாக வீடியோவையும் அணைத்துவிட்டார்.
பல நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு எதிர்வினையாற்றினர் மற்றும் கென்சி கிரீனின் காதலன் உறவில் உறுதிப்பாட்டை விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். விரைவில், பலர் இதே போன்ற வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றத் தொடங்கினர், இதனால் 'ஹஸ்பண்ட் டெஸ்ட்' ட்ரெண்டானது.
ஆண்களுடைய காதலின் உறுதியையும், விசுவாசத்தையும் எதிர்பாராத நேரத்தில் ஒற்றை கேள்வி மூலம் சோதிக்கும் இந்த வழக்கத்திற்கு ஆண்களிடையே வரவேற்பு இல்லை. இந்த சோதனை காதலர்களை தவறாக வழிநடத்துவதாக மக்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
