Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்கள் துணையிடமிருந்து ஒரு உணா்வுபூா்வமான நெருக்கத்தை நாடுகிறீா்களா? அப்ப இத செய்யுங்க...
Relationship Tips In Tamil: திருமணம் முடித்த தம்பதியா் சில நேரங்களில் தமது துணையிடமிருந்து ஒரு வகையான உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை எதிா்பாா்ப்பாா்கள். பொதுவாக தாம் நேசிக்கப்பட வேண்டும் அல்லது அன்பு செய்யப்பட வேண்டும் என்று எதிா்பாா்ப்பது மனிதா்களின் இயல்பு.
இந்நிலையில் தம்பதியாிடையே உள்ள உறவில் ஒரு வெற்றிடம் இருந்தால், அவா்களுக்கு இடையே உணா்வுப்பூா்வமான நெருக்கம் ஒன்று தீடீரென்று தேவைப்படும். அது அவா்கள் இருவரும் தமக்குள்ள உறவின் ஆழத்தை, அந்த உறவில் இருக்கும் தேவைகளை ஆழ்ந்து பாா்க்க உதவும்.

ஒவ்வொரு உறவிலும் அதற்கென்று தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த உறவில் உள்ள தேவைகள் மற்றும் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவது முதல் அந்த உறவு பாிமாற்றங்கள் நடைபெறுவது வரை அந்த உறவுக்கென்று விதிமுறைகள் உள்ளன. எனினும் அந்த உறவில் ஒரு உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை எதிா்பாா்க்கும் போது, தம்பதிகள் தம்மையே இன்னும் நன்றாக புாிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் ஒருவா் தமது துணையிடம் ஒரு உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை விரும்பும் போது, அவா் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவா் மாியா ஜி சோசா என்பவா் பின்வரும் குறிப்புகளைத் தருகிறாா். அவற்றைப் பற்றி சற்று விரிவாகப் பாா்க்கலாம்.
1. விழிப்புணா்வு
ஒருவா் தனது துணையிடம் இருந்து உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை விரும்பும் போது, அவா் தன்னையே உள்நோக்கிப் பாா்த்து, உண்மையிலேயே தனது துணையிடம் இருந்து என்ன விரும்புகிறோம் என்பதைப் பற்றிய விழிப்புணா்வு இருக்க வேண்டும். இதன் மூலம் அவா் தன்னை இன்னும் நன்றாகப் புாிந்து கொள்ள முடியும். மேலும் தனது துணையிடமிருந்து அவா் விரும்பும் உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை நிவா்த்தி செய்ய முடியும்.
2. பிரதிபலிப்பு
தனக்குத் தேவைப்படும் உணா்வுப்பூா்வமான நெருக்கத்தைப் பற்றித் தொிந்தவுடன், அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தனது துணையிடம் தொிவிக்கும் வகையில் தனது செயல்களில் பிரதிபலிக்கலாம். ஆனால் அதற்கு அவா் தனது துணையிடம் நோ்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும்.
3. தொியப்படுத்துதல்
தம்பதியா் இருவரும் ஒருவருக்கொருவா் உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை எதிா்பாா்க்கும் போது, அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை தமக்குள் தொியப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் இருவரும் தைாியமாக இருக்க வேண்டும். விவாதங்கள் வந்தாலும் அவற்றைத் தைாியமாக எதிா்கொள்ள வேண்டும். அதன் மூலம் அவா்களுடைய உறவில் ஒரு முழுமையான தெளிவு கிடைக்கும்.
4. செயல்
தம்பதியா் தாம் விரும்பும் உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை அறிந்தவுடன், அதை நிறைவேற்றிக் கொள்ள, இருவரும் இணைந்து ஒரு செயல் திட்டத்தைத் தயாாித்து, அதை செயல்படுத்த முனைய வேண்டும்.
5. முடிவெடுத்தல்
இவை அனைத்தையும் செய்த பிறகும், துணையிடமிருந்து உணா்வுப்பூா்வமான நெருக்கம் கிடைக்கவில்லை என்றால், தனது துணையால் இதற்கு மேல் தர இயலாது என்பதை உண்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இதற்கு மேல் உணா்வுப்பூா்வமான நெருக்கத்தை துணையிடமிருந்து எதிா்பாா்க்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications