இந்த 5 குணங்கள் இருக்கும் பெண்கள் கள்ள உறவில் ஈடுபட அதிக வாய்ப்பிருக்காம்... இவங்ககிட்ட பார்த்து பழகுங்க...!

துரோகம் ஒரு உறவை அழிக்கக்கூடிய மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். காதல் உறவாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, ஆணோ பெண்ணோ இன்னொருவருடன் உறவாடுவதை பொதுவாக நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தினமும் செய்திகளில் இந்த விஷயங்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

உறவுகளில் துரோகம் என்பது மிகவும் சிக்கலான தலைப்பு. எந்தவொரு உறவிலும், யார் வேண்டுமானாலும் தங்கள் துணையை விட்டு வெளியேறலாம் மற்றும் எந்த நேரத்திலும் வேறொருவருடன் நெருக்கமாக உணரலாம். திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும்?

Personality Traits of Women Who Cheat Their Partner in Tamil

தங்கள் துணையுடன் இணக்கமின்மை முதல் மற்றொருவரை கட்டுப்படுத்த முடியாத ஈர்ப்பு வரை திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கான காரணங்கள் பல உள்ளது. ஆளுமைப் பண்புகள், சூழ்நிலைகள் மற்றும் உறவுகளின் தன்மை போன்ற பல காரணிகள் தவறான உறவுகளுக்கு பங்களிப்பதாக இது பற்றிய ஆராய்ச்சிக் கூறுகிறது.

திருமணத்தையும், காதலையும் மறந்துவிட்டு பிற உறவுகளைத் தொடர்வதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. துணையை ஏமாற்றி, மற்ற ஆண்களுடன் உறவைத் தொடங்க விரும்பும் பெண்களின் சில குணாதிசயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எந்த விஷயத்திலும் எப்போதும் திருப்தி அடையாதவர்கள்

திருமணம் அல்லது காதலில் நீண்டகாலமாக அதிருப்தியுடன் இருக்கும் மனைவிகள் மற்றும் காதலிகள் மற்ற ஆண்களால் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் தங்கள் துணையின் பரிசுகள், அவர்களின் ஆச்சரியங்கள் அல்லது உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். அத்தகையவர்கள் தங்கள் துணையின் அன்பு, கவனிப்பு அல்லது ஆதரவைப் பாராட்ட மாட்டார்கள். இந்த சூழலில் வெளியிலிருந்து வரும் ஒருவரின் ஆதரவு அவர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்.

தங்களின் விருப்பப்படி மட்டுமே வாழ்பவர்கள்

அனைவருக்குமே வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைகள் தேவை. உங்களுக்கு திருமணமாகாவிட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமானது. சுதந்திரமான வாழ்க்கையை வாழும் பெண்கள், திருமணமானவுடன் அல்லது காதல் உறவில் இந்த அளவிலா சுதந்திரத்தை இழக்க நேரிடும். அவர்கள் எளிதாக மற்றொரு ஆணுடன் இணைந்திருப்பதை கற்பனை எய்ய முடியும் மற்றும் அது ஒரு உறவாக உருவாகலாம்.

ஏமாற்றும் குணம் கொண்டவர்கள்

தங்கள் துணையை ஏமாற்றுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ள சில பெண்கள் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இதற்கு முன் பல காதல் உறவுகளையோ திருமணங்களையோ செய்திருக்கலாம். மற்றவர்களை ஏமாற்றி அதனால் பிரச்சனைகளை சந்திக்காதவர்கள் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியால் மீண்டும் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடலாம்.

திருமணம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்

திருமண உறவுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் துணையின் மீது உண்மையான அன்பை செலுத்த மாட்டார்கள். அன்பு கா ட்டுவது மனித இயல்பாகும், ஆனால் அது அனைவராலும் முடியாது. இந்த மனப்பான்மைக் கொண்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது துணையைத் தவிர வேறு ஒருவரைக் கவருவதும், காதலாக மாறுவதும், அவருடன் கட்டுப்பாடில்லாமல் நெருங்கிப் பழகுவதும் பொதுவாக நடப்பதாகும்.

உறவுகளைப் பற்றி வெவ்வேறு கருத்துக் கொண்டவர்கள்

திருமணமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, சமூகம் திணிக்கும் சிந்தனையிலிருந்தும், பார்வையிலிருந்தும் விலகிச் செல்பவர்கள் ஏராளம். ஒரு ஆணுடன் மட்டும் உறவில் ஈடுபடுவதை சில பெண்கள் விரும்புவதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் திருமணம் மீறிய உறவு என்பது சாதாரணமானது. இது திருமணத்தின் நம்பகத்தன்மையை குறைப்பதாக அவர்கள் உணர்வதில்லை.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, July 6, 2024, 14:56 [IST]
Desktop Bottom Promotion