For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறந்த வாழ்க்கைத்துணையிடம் இருக்கும் குணங்கள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?

நேர்மை, உணர்திறன், அமைதி போன்ற குணங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்றாலும், அவை ஒரு சரியான கூட்டாளியின் ஆளுமையை உருவாக்குவது மட்டுமல்ல. இன்னும் நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

|

இணையம், சமூக ஊடகங்கள், பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பல நபர்கள் மூலம், ஒரு சிறந்த கூட்டாளர் எப்படி இருக்க வேண்டும், அவர்கள் என்ன குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் கற்றுக்கொண்டோம்.

Underrated Qualities to Look for in a Life Partner

நேர்மை, உணர்திறன், அமைதி போன்ற குணங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்றாலும், அவை மட்டுமே ஒரு சரியான கூட்டாளியின் ஆளுமையை உருவாக்குவது மட்டுமல்ல. இன்னும் நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன, அவை உங்கள் வாழ்க்கைத்துணையிடம் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் தேட வேண்டிய முக்கியமான குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது

எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது

திருமணமான தம்பதிகள் கூட்டாளர்களாக இருக்க வேண்டும், போட்டியாளர்களாக அல்ல. இருப்பினும், பல ஜோடிகளின் விஷயத்தில், அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள். நிலைமை என்னவாக இருந்தாலும் அவர்கள் எப்போதும் வெற்றி பெற விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் துணையின் தரப்பை தவறு என்று நிரூபிக்க விரும்புகிறார்கள். அவர்கள் உலகத்திற்கு எதிராக போட்டியிட வேண்டும், ஆனால் ஒருவருக்கொருவர் அல்ல.

சீக்கிரம் கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும்

சீக்கிரம் கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும்

ஒரு சிறந்த வாழ்க்கைத்துணையின் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட குணங்களில் ஒன்று, விரைவாகக் கற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் விரைவில் மாற்றியமைத்து கொள்ளக்கூடிய குணமாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும்போது தனியாக நேரம் தேவை என்பதை அங்கீகரித்து, அந்த இடத்தை உங்களுக்குத் தருவது. அதேசமயம், நீங்கள் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: விஞ்ஞானிகள் கூற்றுப்படி கொரோனா இல்லா நிலையை இந்த தடுப்பூசிகள்தான் உருவாக்குமாம்...என்ன தடுப்பூசி அது?

தொடர்புகொள்ள தயாராக இருப்பது

தொடர்புகொள்ள தயாராக இருப்பது

தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதில் ஈடுபடத் தயாராக இருக்கும் கூட்டாளர்களைத் தேடுங்கள். நேரடி தகவல்தொடர்பு அல்லது தங்கள் நேர்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கும் நபர்களுடன் இருப்பது கடினம். மேலும், தகவல்தொடர்பு என்று வரும்போது நம் அனைவருக்கும் சவால்கள் இருக்கும்போது, முயற்சி செய்வதற்கான விருப்பம் மிக முக்கியமானது.

சிரிக்க வைப்பது

சிரிக்க வைப்பது

சிரிப்பு என்பது ஒருவருடன் இணைவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். நாம் ரசித்து சிரிக்கும் அதே விஷயங்களை இன்னொருவரும் ரசித்து சிரிப்பதும் நகைச்சுவையாக பேசுவதும் நமக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். ஆகவே, வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் உங்களை சிரிக்க வைக்கும் ஒரு கூட்டாளரைக் கொண்டிருப்பதன் மதிப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது

தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது

வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் உறவுக்கு தங்களை நன்கு ஆராய்ந்து, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும், தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யவும் விரும்பும் கூட்டாளர்கள் தேவை. இருப்பினும், ஒருவர் அந்த வளர்ச்சியை மாற்றியமைக்க விரும்பவில்லை என்றால், உங்கள் உறவு சிக்கலாக இருக்கலாம்.

MOST READ: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? எதுக்கும் பயப்படாதீங்க...!

பிரச்சினைகளின் போது உதவி கேட்க தயங்காமல் இருப்பது

பிரச்சினைகளின் போது உதவி கேட்க தயங்காமல் இருப்பது

அனைத்து நீண்ட கால உறவுகளும் ஏற்ற தாழ்வுகளை கடந்து பல முறை நீங்கள் விட்டுவிட எண்ணிய பிறகும் நீடிக்கும். இது மிகவும் இயற்கையானது. ஆனால் இந்த தருணங்களில் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது அவர்கள்கடினமானவரா அல்லது மென்மையான நம்பக்கூடிய ஒருவரா அல்லது விஷயங்கள் கடினமானதாக இருக்கும்போது யார் நிலையை சுமூகமாக்க முயலுவார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Underrated Qualities to Look for in a Life Partner

Here is a list of underrated qualities to look for in a spouse.
Story first published: Thursday, July 1, 2021, 17:08 [IST]
Desktop Bottom Promotion