Latest Updates
-
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
திருமண நாள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் இப்படியெல்லாமா பிரச்சினை வரும்.. உஷார்
திருமண நாள் என்பது மணமகன், மணமகள் இருவருக்குமான தனிப்பட்ட விசயங்களை கொண்டது. அதையெல்லாம் பொதுவெளியில் பதிவிடுவதென்பது சரியானதாக இருக்காது. ஏனெனில் உங்களுடைய விருந்தினர்கள் எல்லாரும் உங்கள் திருமணத்தி
காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப்போகும் வரை நடக்கிற எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை என்றால் பலருக்கு எந்த வேலையும் நடப்பதில்லை. சமூக வலைதளங்களில் இதுபோன்ற பதிவிடல்கள் நீங்கள் யார் உங்களின் பலம் என்ன உங்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு என்ன உள்ளிட்ட அனைத்தையும் பதிவிடுகிறோம்.பொதுவெளியில் இருக்கும் இந்த விசயங்களை குற்றச் செயலில் ஈடுபடுவர்களிடம் நாமாகவே முன் வந்து கொடுப்பது போல் ஆகிவிடுகிறது.

எல்லா அனுபவங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்பது சரியான செயலாக இருக்காது. அதுவும் திருமணம், இல்லற வாழ்க்கைக் குறித்த பதிவுகளை ஒருபோதும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்தால் நன்றாக இருக்கும். மேலும் சமூக வலைதளங்களில் பதிவிடவேக் கூடாத திருமண நாள் பற்றிய விசயங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்

திருமணம்
இருமணங்கள் இணையும் பெருநாள் தான் திருமணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வழக்கம் இருக்கலாம். வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்க ஆண் பெண் இருவருக்கும் இது ஒரு புதிய அத்தியாயம். இதற்காக பருவ வயதில் இருந்தே கனவு காணத் தொடங்கியவர்கள் ஏராளம்.

திருமணத்தை நடத்திப் பார்
நமது கலாச்சாரத்தின் படி திருமணத்தை நடத்துவது என்பது இருவீட்டார்க்கும் மிகக் கடினமான செயல். பந்திக்கு வந்தவனையெல்லாம் சமாளித்து தான் ஒரு திருமணத்தை நடத்த வேண்டி இருக்கிறது. ஒரு த்ரில்லர் படத்தை போன்ற காட்சி அமைப்புகள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துக் கொண்டே இருக்கும். அண்ணன் பங்காளி, ஊர்க்காரங்கள், சமூகத்தாள்கள் இப்படி எல்லாரையும் அனுசரித்துப் போக வேண்டிய சூழல் இருந்துக் கொண்டே இருக்கும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் மண்டபம் வரை வந்து நின்று போய்விடக்கூடாது என்பதற்காக ஆண் வீட்டாரும் சரி, பெண் வீட்டாரும் சரி தங்களின் சகிப்புத்தன்மைக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்து தான் திருமண நாளை வெற்றிகரமாக முடிக்கிறார்கள்.

சமூக வலைதளங்கள் உங்கள் படுக்கையறையா
சமூக வலைதளங்கள் என்பது புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகமான ஒரு அமைப்பு ஆகும். அங்கு நல்ல நண்பர்களை தேடுங்கள், உங்கள் கருத்தியல் பரிமாற்றங்களை பகிருங்கள். ஆனால் சமூக வலைதளங்கள் ஒரு போதும் உங்கள் படுக்கையறை அல்ல. அந்த அறை என்பது உங்களுக்கும் உங்கள் மனைவி அல்லது கணவனுக்குமான இடமாகும். அங்கு நடப்பதை ஒரு போதும் வெளியில் சுட்டிக் காட்ட விரும்பப் போவதில்லை. அதே போல் தான் நீங்கள் மட்டுமே அறியக்கூடிய விசயங்களை பொதுவெளியில் பதிவிடுவதென்பது தவறான செயலாகும்.

திருமணநாள் பற்றி பதிவிடலாமா?
நிச்சயம் பதிவிடலாம். யாருக்கும் யாருக்கும் திருமணம் ஆகியது என்பதைப் பற்றி உங்கள் சமூக ஊடக நண்பர்களுக்கு பதிவிடலாம். அதைத் தாண்டி பதிவிடுவது என்பது உங்களுக்கு தொல்லைகளைத் தான் கொண்டு வந்து தரும். அதிலும் முக்கியமாக எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ அதையெல்லாம் பட்டியட்டிலிருக்கிறோம்.

கல்யாண செலவு
கல்யாணத்திற்கு பந்தல்கால் நட்டதிலிருந்து திருமணநாள் முடியும் வரை எண்ணற்ற செலவுகள் இருக்கும். அந்தச் செலவுகளை எல்லாம் குடும்பத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டி சமூக வலைதளங்களில் பதிவிடுவது மூன்றாம் நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.

விருந்தினர் பட்டியல்
விருந்தினர் பட்டியலை ஒரு போதும் பதிவிடாதீர்கள். ஏனென்றால் திருமண நாள் பதட்டம் உங்களுக்குள் நிச்சயம் இருக்கும். வந்தவர்களை நீங்கள் குறிப்பிடும் போது மறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் வராதவர்களை மறந்து பதிவிடும் வாய்ப்பும் இருக்கும். அந்த தருணங்கள் உங்கள் உறவினரை நண்பரை கவலைக்குள்ளாக்கும்

திருமண நாள் உடை
திருமணத்திற்கான அழைப்பாக உங்கள் அழைப்பிதழ் மட்டுமே இருக்க வேண்டும். மாறாக நீங்கள் ஒன்றும் பொருட்காட்சி நடத்தவில்லை. எனது கல்யாண உடை இப்படிப்பட்டது. கல்யாணத்திற்கு செய்யப்படும் அலங்காரம் இத்தகையது. உணவு இவ்வளவு பிரம்மாண்டங்களை பெற்றிருக்கிறது போன்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உங்களை வாழ்த்துவதற்காகத் தான் விருந்தினர்கள் வருகிறார்கள். அவர்களை உபசரிப்பது என்பது நமது கடமை. உபசரிப்பை விளம்பரப்படுத்துவது நமது பண்பாடல்ல.

நாளின் முக்கியத் தருணங்கள்
திருமண நாள் தொடங்கி முடியும் வரை என்ன நடந்தது என்பதை பதிவிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உங்கள் குடும்பத்தாரும் உறவினர்களும் உங்கள் கூடத் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்கப் போவதில்லை. அப்படி அன்றைய நாளைக் குறிப்பிடும் போது நல்லதை எழுதும் போது மனக்கசப்புகளும் நிச்சயம் வெளிப்படும். அது திருமண வாழ்க்கையின் நல்லதொரு தொடக்கதிற்கு சரியானதாக இருக்காது.

குடும்பத்துக்குள் நடந்தவை
இரு வீட்டாருக்கும் ஆயிரம் மனக்கசப்புகள் நடந்திருக்கலாம். அவற்றையெல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என நமது பெற்றோர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த குடும்ப விவகாரங்களை நடுத்தெருவில் கொண்டு வர வேண்டுமானால் நீங்கள் சமூக வலைதளங்களி பதிவிடுங்கள். ஆனால் அன்றோடு உங்கள் இல்லற வாழ்க்கைக்கும் நீங்கள் ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள் என்று தான் அர்த்தம்

மன அழுத்தம்
மன அழுத்தம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. இருவருக்கும் இது நிச்சயம் புது அனுபவத்தை தருகிறது. அதனால் பதட்டம் என்பது இருவருக்கும் பொதுவாக இருக்கக் கூடியது தான். இதையெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உங்களின் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களை பின் தொடர்பவர்கள் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களாகக் கூட இருக்கலாம். நீங்கள் அலுவலகம் திரும்பும் போது நிச்சயம் பேசு பொருளாக மாறுவீர்கள்.

நாட்களை எண்ணாதீர்கள்
உங்கள் வாழ்வின் புதிய அத்தியாயம் அது. அதற்காக நீண்ட நாட்கள் நீங்கள் காத்திருந்திருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு வழங்கப்பட்ட டாஸ்க் அல்ல. எனவே நாட்களை எண்ணாதீர்கள் மாறாக திருமண வாழ்க்கையை சுவைப்பதற்கான விசயங்களை திட்டமிடுங்கள்.

தேனிலவுக் குறித்த தகவல்
நீங்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேனிலவிற்கு கடல் போல் வீடு இருந்தும் சுற்றுலாத் தளங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்படி இருக்கையில் அந்த விவரங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்பது ஏற்புடையதன்று. முக்கியமாக உங்களுடைய பட்ஜெட், தங்கும் அறை, ஹோட்டலின் பெயர் போன்றவற்றை பதிவிடுவது பாதுகாப்பு அம்சஙகளை சீர்குழைப்பதற்கான அம்சமாகக் கூட இருக்கலாம்.



Click it and Unblock the Notifications