For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! நீங்க கள்ள உறவில் ஈடுபடுவதற்கு முன் இந்த விஷயங்கள கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்!

குழந்தைகளின் வேலைகளை நீங்கள் இருவரும் உங்களுக்கிடையில் சமமாக பிரித்துக் கொள்வது நல்லது. உங்கள் மனைவி குழந்தைகளுக்கு உணவளித்தால், நீங்கள் வீட்டுப்பாடத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

|

பெரும்பாலான தம்பதிகளின் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது அவர்களின் பாலியல் வாழ்க்கை. திருமணமாகி சில காலம் சென்ற பிறகு உறவில் சலிப்பு ஏற்படுகிறது. இது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படலாம். உங்கள் உறவில் சலிப்பு ஏற்படும்போது, இன்னொரு துணையை தேடி நீங்கள் செல்லலாம். வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் பெரும்பாலும் தங்கள் உறவில் ஏமாற்ற முனைகிறார்கள், ஏனெனில், இனி மனவியுடான உறவு அப்படி இருக்க போவதில்லை என்றும், உற்சாகம் போய்விட்டது என்றும் அவர்கள் உணர்கிறார்கள். ஆண்களுக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை திருப்தியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கிறார்கள்.

things-men-should-know-before-they-cheat-on-their-partner-in-tamil

ஒரு ஆண் தனது துணையை ஏமாற்றுவதற்கு முன் முயற்சி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியாமல், அது உங்கள் எண்ணங்களை மாற்றக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொஞ்சம் மசாலா சேருங்கள்

கொஞ்சம் மசாலா சேருங்கள்

உங்கள் உறவு மிகவும் சலிப்பாக மாறியிருந்தால், நீங்கள் வேறொருவரைத் தேடுகிறீர்கள் அல்லது வேறொருவர் உங்களை ஈர்க்கிறார் என்றால், நீங்கள் ஏன் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் கொஞ்சம் மசாலா சேர்க்கக்கூடாது? செக்ஸ் வாழ்க்கையை மசாலாப் படுத்த, நீங்கள் வெவ்வேறு நிலைகளை முயற்சி செய்ய வேண்டும். காதல் சர்ப்ரைஸ் மற்றும் டேட்டிங்கைச் சேர்த்து, அது முன்பு போல் உற்சாகமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.

MOST READ:இந்த 5 ராசிக்காரங்க முதலாளியா இருக்க தகுதியே இல்லாதவங்களாம்... அப்படி இருந்தா அதோகதிதானாம்!

செக்ஸ் பொம்மைகள்

செக்ஸ் பொம்மைகள்

செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்தியும் தம்பதிகள் இருவரும் முயற்சி செய்யலாம். ஏனென்றால் இந்தியாவில் இப்போது நிறைய கிடைக்கிறது. இது பொருந்தக்கூடியதாக இருந்தால், திருமண ஆலோசகரை வரவழைத்து தம்பதிகள் ஆலோசனை செய்யலாம். உங்கள் துணையும் நீங்களும் உங்கள் பாலியல் வாழ்க்கையை பற்றி பேசி, இணைந்து மகிழ்ச்சயாக செயல்பட வேண்டும்.

ஒன்றாக செயல்பாடுகளை செய்யுங்கள்

ஒன்றாக செயல்பாடுகளை செய்யுங்கள்

ஒரு நல்ல துணையாக இருப்பதற்கு, திருமண உறவில் நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். அதில் செயல்பாடுகள் மற்றும் வேலைகளை ஒன்றாகச் செய்வது முக்கியம். உங்கள் மனைவிக்கு பூக்களைக் வாங்கி கொடுங்கள், அவள் விரும்பும் மிட்டாய்கள் கூட வாங்கி கொடுக்கலாம். வீட்டை அலங்கரிக்கலாம். சில சமயங்களில் நீ கெட்டவராக இருந்தாலும் அவளுக்கு அன்றைய சமையற்காரனாக இருக்க முயற்சி செய்யலாம். அவள் உங்களை வேறுவேறு விதமாக பார்க்க வைக்க வேண்டும். நீங்கள் நேசிக்கப்படுவதற்கு அன்பைக் காட்ட வேண்டும் மற்றும் நல்ல உடலுறவு கொள்ள வேண்டும். இவையெல்லாம் ஒரு உறவில் இருப்பது மிகவும் முக்கியம்.

உங்கள் மீது கவனம் செலுத்த வையுங்கள்

உங்கள் மீது கவனம் செலுத்த வையுங்கள்

சில நேரங்களில், குழந்தைகள் படத்தில் இருக்கும்போது, ​​​​பெண்கள் தானாகவே விசுவாசமான பெற்றோராகி, குழந்தையின் மீது கவனம் செலுத்துகிறார்கள். இதனால், ஆண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டதாக உணர்கிறார்கள். குழந்தைகளிடம் வேறு யாரும் பொறுப்பேற்காததால் இது நடக்கிறது. இதைச் சமாளிக்க, நீங்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்து, டேட்டிங் செல்லுங்கள். ​​சில சமயங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவரை வைத்திருங்கள். அவள் லேசாக உங்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல உணரட்டும்.

சமமாக பிரித்துக்கொள்ளுங்கள்

சமமாக பிரித்துக்கொள்ளுங்கள்

குழந்தைகளின் வேலைகளை நீங்கள் இருவரும் உங்களுக்கிடையில் சமமாக பிரித்துக் கொள்வது நல்லது. உங்கள் மனைவி குழந்தைகளுக்கு உணவளித்தால், நீங்கள் வீட்டுப்பாடத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை விளையாடுவதற்கு கீழே அழைத்துச் செல்லுங்கள். இதனால் உங்கள் மனைவி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் ஓய்வெடுக்கலாம். சுமையை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த நேரங்களில் உங்கள் மனைவி உங்கள் மீது அதிக கவனம் செலுத்தலாம். இது உங்கள் உறவில் மீண்டும் தீப்பொறியை கொண்டுவர உதவும்.

ஆரோக்கியமான தொடர்பு

ஆரோக்கியமான தொடர்பு

மகிழ்ச்சியான திருமணத்திற்கு ஆரோக்கியமான தொடர்பு முக்கியமானது. உங்கள் உறவில் ஏதோ காணவில்லை அல்லது ஏதோ குறைகிறது என்று உங்கள் துணையிடம் சொல்லுங்கள். நீங்கள் அவளுடைய பிரச்சினைகளைக் கேட்கவும் பேசவும் தயாராக இருங்கள். உங்களுடைய பிரச்சனைகளை அவளிடம் சொல்லுங்கள். வேறு யாரும் அதை உறுதிப்படுத்த முடியாது என்பதால் ஒன்றாக இணைந்து இருவரும் பிரச்சனையை பேசித் தீருங்கள்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

நீங்கள் வேறொருவருடன் கள்ள தொடர்பில் ஈடுபடுவதற்கு முன்பு மற்றும் உங்கள் மனைவியை ஏமாற்றுவதற்கு முன்பு, மேலே உள்ள விஷயங்களைச் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள். இதனால் உங்கள் திருமண உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Men Should know Before They Cheat On Their Partner in tamil

Here we are talking about Things Men Should know Before They Cheat On Their Partner in tamil.
Desktop Bottom Promotion