For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! உங்க கணவன் படுக்கையில் 'இப்படி' இருந்தா...அவர் உங்கள விட்டு பிரிஞ்சி போயிடுவாராம்!

|

திருமண உறவு என்பது ஆயிரம் கடமைகள் மற்றும் பொறுப்புகளை சுமந்தது. ஆண், பெண் இருவரும் பல்வேறு ஆசைகளோடு திருமண உறவுக்குள் நுழைகிறார்கள். ஒரு உறவு உயிர்ப்போடு இருக்க பல விஷயங்கள் மிக அவசியம். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருப்பது, விட்டுக்கொடுத்தல் மற்றும் அன்பு. இந்த அன்பு உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். நீண்ட காலம் உறவை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல துணையின் மீது அன்பு இருக்க வேண்டும். இவை பெரும்பாலான தம்பதிகளிடையே இருப்பதில்லை. இதனால், தான் விவாகரத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. எந்தவொரு பெண்ணுக்கும் தன் கணவன் தன்னை விட்டு பிரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு காலத்தில் உங்களுடன் இருந்த அதே தொடர்புடன் உங்கள் கணவர் இனி இருக்க மாட்டார் உணர மாட்டார் என்பதை புரிந்துகொள்ள மிகவும் வருத்தமளிக்கும். இது பல காரணங்களால் இருக்கலாம். அவை, மன அழுத்தம், துரோகம், நம்பிக்கை சிக்கல்கள் அல்லது அவர் உங்கள் மீது வைத்த காதலும் ஆர்வமும் குறைவதால் என பல காரணங்கள் உள்ளன. அத்தகைய சிக்கலைத் தீர்க்க, உங்கள் கணவர் இனி உங்களுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். இந்த சூழ்நிலையை எவ்வாறு கண்டறிவது என்றும் அதற்கான அறிகுறிகள் பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே படுக்கையில் தூங்குவது

ஒரே படுக்கையில் தூங்குவது

உங்கள் கணவர் உங்களுடன் படுக்கையில் தூங்குவதைத் தவிர்த்துவிட்டால், உறவில் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறதாக அர்த்தம். திருமணமான நீங்கள் இருவரும் தனித்தனியாக தூங்க வேண்டியதில்லை. தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு தான் திருமணம். நீங்கள் அந்த உறவில் நெருக்கமாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும். படுக்கை வேறவேறையாக மாறுவது இருவருக்கும் உள்ள நெருக்கத்தை குறைத்து இடைவெளியை அதிகரிக்கிறது. இது உங்கள் மீது உங்கள் கணவன் ஆர்வத்தை இழந்துவிட்டதால் கூட இருக்கலாம்.

பேரார்வம் இல்லாமை

பேரார்வம் இல்லாமை

முத்தங்களின் போது, ​​உடலுறவின் போது உணர்ச்சியின்மை எளிதில் அடையாளம் காணக்கூடியது. குறிப்பாக உங்கள் கணவர் உண்மையில் அதை உணரவில்லை என்றால், உங்களை விட்டு விலக நினைக்கிறார் என்றால், பிரச்சனை கொஞ்சம் பெரிதாக உள்ளது. உடலுறவிற்கு நீங்கள் அழைக்கும்போது மறுத்துவிட்டாலோ, இல்லை ஆர்வம் இல்லாமல் செயல்பட்டாலோ, அது உங்கள் மீது ஆர்வத்தை இழந்ததாக அர்த்தம். முன்பை ஒப்பிடுகையில், உங்கள் கணவரின் அசைவுகளில் அதே நெருப்பும் ஆர்வமும் இல்லை என்பதை நீங்கள் உணரலாம்.

உங்களைத் தவிர்க்கிறார்

உங்களைத் தவிர்க்கிறார்

ஒவ்வொரு முறையும் நீங்கள் அவருடன் நெருங்கி பழக முயற்சிக்கும் போதோ அல்லது மீண்டும் இணைய முயற்சிக்கும் போதோ உங்கள் கணவர் உங்களைத் தவிர்க்க முயற்சிப்பது போல் நீங்கள் உணரலாம். மேலும் அவர் உங்களுடன் அதே தொடர்பை உணராததால் இருக்கலாம். ஒருவேளை அவர் வேறொருவருடன் இருக்க விரும்பலாம். எல்லா செயல்களிலும் உங்களை தவிர்க்கிறார் என்றால், உங்கள் மீதான ஆர்வம் குறைந்து இருக்கலாம்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

உங்கள் தோற்றம், வேலை மற்றும் முயற்சிகள் பற்றி, உங்கள் கணவர் உங்களை அரிதாகவே பாராட்டினால், அதற்குக் காரணம் அவர் உங்களிடம் ஆர்வம் காட்டவில்லை. அவர் வேறு யார் மீதாவது ஆர்வம் காட்டலாம் அல்லது வேறொருவருடன் இருக்க விரும்பலாம்.

தொடர்பு( மனம் விட்டு பேசுதல்)

தொடர்பு( மனம் விட்டு பேசுதல்)

எந்தவொரு உறவின் முக்கிய அம்சம் என்பது ஆரோக்கியமான தொடர்பு. வெற்றிகரமான ஒன்றைத் தக்கவைக்க, உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களைத் தொடர்புகொள்வது அவசியம். உங்கள் கணவர் அதுபோன்று எப்போதாவது செய்தால், உங்கள் உறவு இணைந்து இருக்கும். குறைந்தபட்சம் இதில் ஆர்வம்கூட காட்டாமல் இருந்தால், உங்கள் கணவர் இனி உங்களிடம் ஈர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறி இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs your husband doesn't find you attractive anymore in tamil

Here we are talking about the Signs your husband doesn't find you attractive anymore in tamil.
Story first published: Saturday, February 19, 2022, 18:30 [IST]
Desktop Bottom Promotion