Latest Updates
-
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது!
நீங்கள் சரியான ஒருவரைத்தான் திருமணம் செஞ்சிருக்கிறீங்கன்னு எப்படி தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நீங்கள் சரியான நபரை மணந்தீர்களா இல்லையா என்று யோசிக்கிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான பந்தமாகும். உங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒருவருடன் செலவழிக்க முடிவு செய்வது மற்றும் அவர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது ஒரு பெரிய முடிவாகும். இந்த முடிவு தவறாகும் பட்சத்தில் அது உங்களை மட்டுமின்றி நீங்கள் சார்ந்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்கும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நீங்கள் சரியான நபரை மணந்தீர்களா இல்லையா என்று யோசிக்கிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். அவர்களின் சில செயல்கள் அவர்கள் எப்படிப்பட்ட வாழக்கைத்துணையாக இருப்பார்கள் என்று கூறிவிடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அவர்களுடன் நீங்கள் நீங்களாகவே இருக்கலாம்
சரியான நபருடன் நீங்கள் இருக்கும்போது, உங்கள் உண்மையான குணங்களை நீங்கள் வெளிப்படுத்தலாம். அது நல்ல, கெட்ட, மற்றும் அசிங்கமான எந்த குணமாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் உங்களால் வெளிப்படுத்த முடியும். மேலும் நீங்கள் இப்படித்தான் என்று உங்களை ஜட்ஜ் பண்ண மாட்டார்கள்.

அனைத்தையும் தயங்காமல் பகிர்ந்து கொள்வது
உங்கள் கடந்த காலத்தில் ஏதேனும் நடந்திருக்கலாம், அதனை மற்றவர்களிடம் சொல்வதில் நீங்கள் அவ்வளவு அக்கறை காட்டாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் இப்போது வருத்தப்படுகிற ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்திருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், உங்கள் துணையிடம் நீங்கள் சொல்ல முடியும், அவர்கள் உங்களைக் கேட்டு ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்குள் இருக்க வேண்டும்.

அவர்களுடன் உங்களுக்கு வயதாகி வருவதை நீங்கள் காணலாம்
நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பிடித்ததை செய்வது, பயணம் செய்வது, ஒருவருக்கொருவர் நல்ல கம்பெனியாக இருப்பதை உணர முடிந்தால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்.

சிறந்த துணை மற்றும் பெற்றோராக இருப்பார்கள் என்று தோன்றுவது
உங்கள் குடும்பத்தை நீங்கள் விரிவாக்க விரும்பினால், நீங்கள் குழந்தைகளை நேசிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு அவர் இன்னும் பயந்தாலும், அவருடைய குணங்கள் மற்றும் குணாதிசயங்களால் அவர் எந்த வகையான பெற்றோராக இருப்பார் என்பதை நீங்கள் ஆழமாக அறிந்து கொள்வீர்கள்.

அவர்களுடன் இருப்பதை விரும்பி தேர்வு செய்வது
சில சந்தர்ப்பங்களில், மக்கள் சிக்கித் தவிக்கும் உறவுகளில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் சரியான நபருடன் இருக்கும்போது, நீங்கள் இன்னும் நீங்களாகத்தான் இருப்பீர்கள், உங்கள் வாழ்க்கையை உங்கள் கூட்டாளருடன் பகிர்ந்து கொள்வது நீங்கள் சுயநினைவுடன் எடுத்த முடிவாக இருக்க வேண்டும்.

நிபந்தனையற்ற காதல்
உங்கள் இதயத்தில், இந்த நபர் உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் குழப்பமடையும்போது கூட, நீங்கள் எதையாவது மோசமாக சொல்லும்போது அல்லது அவர் உங்களுடன் கோபப்படும்போதும் இந்த எண்ணம் மாறாது.

உங்கள் உறவில் பாசிட்டிவ் எண்ணம் நிறைந்திருக்கும்
நீங்கள் ஒருவரை திருமணம் செய்யும்போது, நீங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இருக்கும்போது அவர் உங்களை வேறொருவராக வடிவமைப்பார். உங்கள்துணையால் நீங்கள் இன்று யாராக இருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நீங்கள் தொடர்ந்து எவ்வாறு வடிவமைக்கப்பட்டாலும் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
